ஓவர் ஸ்பீடில் வந்த BMW கார்.. தூக்கி வீசப்பட்ட பைக்.. நிதியமைச்சக துணை செயலர் உயிரிழப்பு..!!
டெல்லியில் அதிவேகமாக வந்த BMW கார் மோதியதில் நிதியமைச்சக துணை செயலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லி கேன்ட்மென்ட் பகுதியில் நேற்றிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை துணை செயலர் நவ்ஜோத் சிங் (52) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் கடுமையான காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து BMW காரின் அதிவேகமும் இலக்கமின்மையும் காரணமாக ஏற்பட்டதாக போலீஸ் கூறுகிறது. இது டெல்லியின் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
விபத்து ரிங் ரோட்டில், தௌலா குவான் அருகிலுள்ள டெல்லி கேன்ட்மென்ட் மெட்ரோ ஸ்டேஷன் அருகே நிகழ்ந்தது. நவ்ஜோத் சிங் தனது மனைவியுடன் பாங்க்லா சாகிப் குருத்வாராவுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, குர்காவத்தில் வசிக்கும் காகன்பிரீத் என்ற பெண் ஓட்டி வந்த BMW கார் பின்புறமிருந்து அவர்களது இரு சக்கர வாகனத்தை மோதியது.
இதையும் படிங்க: கப்சிப்னு அரசு இல்லத்தை காலி செய்த ஜெகதீப் தன்கர்..!! இப்போ எங்க இருக்காரு தெரியுமா..!!
இதில் இருசக்கர வாகனம் டிவைடர் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில், நவ்ஜோத் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி மற்றும் காரை ஓட்டிவந்த பெண் உள்ளிட்ட இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
BMW காரை ஓட்டிவந்த பெண் அதிக வேகத்தில் வந்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்ததால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மேலும் இவ்விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி விபத்துக்குள்ளான காரும் மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன. கிரைம் டீம் மற்றும் ஃபாரன்சிக் நிபுணர்கள் விபத்து இடத்தைப் பரிசோதித்தனர்.
இந்த விபத்து டெல்லியின் சாலை பாதுகாப்பு, அவசர உதவி மற்றும் கார்களின் பொறுப்பின்மை குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது. போலீஸ் ஹிட் அண்ட் ரன் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: வாக்கை திருடி ஆட்சிக்கு வந்தவங்க!! அதான் இப்பிடி!! பிரதமர் மோடியை வசைபாடும் ராகுல் காந்தி!!