×
 

நிறுத்துங்க சார்...!! - மு.க.ஸ்டாலின் காருக்குள் நுழைந்த பறக்கும் படை அதிகாரிகள்... முதல்வர் வாகனத்திற்குள் அதிரடி சோதனை...!

தூத்துக்குடி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் நெல்லைக்கு சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகைகுளம் பகுதியில் மறித்து சோதனை செய்ததால் பரபரப்பு 

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி தமிழகத்தில் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தீவிர தேர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தூத்துக்குடி நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக தனி விமான மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அமைச்சர் கீதா ஜீவன், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராமஜெயம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கருணாநிதி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மார்க்கண்டேயன்.

மேலும் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா பூங்கோதை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து கார் மூலம் நெல்லைக்கு தமிழக முதல்வர் சென்றார்

இதையும் படிங்க: என்னா ஸ்பீடு...!! - நாளை திருச்சி வரும் விஜய்... இன்றே ஒட்டுமொத்த சீனையே மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

 பின்னர் அங்கிருந்துகார் மூலம் அவர் திருநெல்வேலிக்கு சென்றார். அப்போது வாகைகுளம் பகுதியில் கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழக முதல்வரின் காரை மறித்து முழுவதுமாக சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 

இதையும் படிங்க: #BREAKING கைமீறும் கேஸ் தட்டுப்பாடு... நேரடியாக களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்... இன்று அவசர ஆலோசனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share