“எதுக்காக சோதனை?” - ”எனக்கு நெஞ்சு வலியே வந்துடுச்சி”... அதிமுக EX எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி...!
எதற்காக சோதனை என்ற தகவலை லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்கவில்லை என அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் அதிமுக எம்எல்ஏவாக இருந்த இவர் அப்பொழுது பார்த்தோம் அப்படின்னா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சவழிப்பு போலீசார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அது தொடர்பாக இன்று காலை 6:30 மணி முதல் அவரது பண்ருட்டியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனையின் இடையே சத்யா பழனிசெல்வம் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக அவரை அவரது உறவினர்கள் தற்போது கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு எக்கோ உள்ளிட்ட தீவிர சோதனைகள் வந்து மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனைக்கிடையே அவர் வந்து லஞ்சவழிப்பு போலீசார் சோதனை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்பொழுது அவர் அளித்த பேட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் வந்தபோது பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தோம். அந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடைபெறுவதாக குற்றச்சாட்டினார். கடந்த ஆண்டும் இதே போல் அதிமுக பொதுச்செயலாளர் வந்தபோது வரவேற்பு கொடுத்த சில தினங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை எனது வீட்டில் நடைபெற்றது.
இதையும் படிங்க: விடிந்ததும் வந்த அதிர்ச்சி... ரெய்டு நெருக்கடியில் சுருண்டு விழுந்த அதிமுக எம்.எல்.ஏ...!
தற்பொழுது அதிமுக பொதுச்செயலாளர் வந்த மூன்றாவது நாளிலேயே இந்த சோதனை நடத்தப்படுகிறது.இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படும் சோதனை.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இடம் அனுமதி பெற்று மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். எதற்காக சோதனை செய்கிறார்கள் என்ற தகவலை எனக்கு தெரிவிக்காத காரணத்தினால் தான் என்னுடைய ரத்த கொதிப்பு அதிகமாகி இந்த நெஞ்சுவலி ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விடிந்ததும் வந்த அதிர்ச்சி... ரெய்டு நெருக்கடியில் சுருண்டு விழுந்த அதிமுக எம்.எல்.ஏ...!