×
 

அதிமுகவில் அடுத்த விக்கெட்! Ex எம்.பி இளவரசன் விலகல்!! கட்சியில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை என விரக்தி!

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. இளவரசன் விலகி உள்ளார். தனது விலகல் கடிதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பி உள்ளார்.

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் தொடர்ந்து நிலவும் உள் சலசலப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் எம்.பி. திருச்சி ஆ. இளவரசன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி அதிரடியாக விலகியுள்ளார்.

1983 முதல் அதிமுகவில் விசுவாசமாக பணியாற்றி வந்த இளவரசன், தனது ராஜினாமா கடிதத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கழகம் துடுப்பு இல்லாத படகு போல் அல்லாடுகிறது. உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் இடமில்லாமல் போனது. பணம் மற்றும் புதியவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “கடந்த 42 ஆண்டுகளாக எந்த சூழ்நிலையிலும் கட்சியை விட்டு விலகாத நான், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தொண்டர்களின் நம்பிக்கை நிலைகுலையும் அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதைக் கண்டு மனம் வருந்துகிறேன்.

இதையும் படிங்க: தவெக குதிரை பேரம்!! சிபிஐ விசாரணை கோர திட்டம்! ஆப்பு வைக்க தயாராகும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

11 தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்தும், அதற்கான காரணத்தை ஆராயாமல், பொறுப்பேற்காமல், மூத்த நிர்வாகிகளின் ஆலோசனையை புறக்கணித்து, எதிர்க்கட்சியான தி.மு.க.வுடன் இணைந்து முதலமைச்சர் பதவிக்கு துணிந்தது வருத்தமளிக்கிறது” என்று இளவரசன் தெரிவித்துள்ளார்.

இந்த ராஜினாமா அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வேலுமணி அணி, சண்முகம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தரப்பில் இருந்து அதிருப்தி வெளியான நிலையில், இளவரசன் போன்ற நீண்டகால தொண்டரின் விலகல் கட்சியின் ஒற்றுமைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

அதிமுகவில் தொடர் தோல்விகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள உள் மோதல்கள் பல முக்கிய நிர்வாகிகளை விலக வைத்து வருகின்றன. இளவரசனின் ராஜினாமா கடிதம் கட்சியின் தற்போதைய தலைமை மீது கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி அதிமுகவின் எதிர்காலத்தை பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இந்த சம்பவம் அதிமுகவில் மேலும் பல விலகல்களுக்கு வழிவகுக்குமா என்பதை அடுத்த சில நாட்களில் பார்க்க வேண்டும். தற்போது கட்சியின் உயர்மட்டம் இந்த விவகாரத்தை எப்படி கையாளப் போகிறது என்பதில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

இதையும் படிங்க: கப்சிப்னு இருக்கணும்! வாய திறக்கக்கூடாது! கட்சியில் மீண்டும் இணைந்தவர்களிடம் இபிஎஸ் கறார்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share