×
 

இபிஎஸுக்கு அடுத்த ஷாக்... அதிமுக டு தவெக தாவும் அடுத்த முன்னாள் அமைச்சர் - யார் இவர்?

முக்கிய நிர்வாகிகள் கூறிய கருத்துகளைக்கூட தற்போதைய தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.

சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வளர்மதி ஆகியோரைத் தொடர்ந்து 4வது முன்னாள் அமைச்சராக எம்.எஸ்.எம். ஆனந்தனும் தவெகவில் இணையவுள்ளார். எம்.எஸ்.எம். ஆனந்தன், 1980-ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்து கிளைக் கழக செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை அனைத்து பொறுப்புகளையும் வகித்தவர். 2011-ல் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு நேரில் வந்த அவர் அளித்த பேட்டியில், "நான் எம்.எஸ்.எம். ஆனந்தன். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1980-ஆம் ஆண்டு முதல் பயணித்து வருகிறேன். 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஐந்து ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றியுள்ளேன். அதன் பிறகு பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். கடந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

ஆனால், தற்போது அதிமுகவில் இருக்கும் தலைமையே சுயநல தலைமையாக செயல்பட்டு வருகிறது. உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அங்கே இன்று இடமில்லை. ஒரு சுயநலக் குழுவின் பிடியில்தான் கட்சித் தலைமை இயங்குகிறது. அந்த அளவுக்கு கட்சியின் நிலைமை மோசமாகியுள்ளது.

இதையும் படிங்க: எனக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்!! எஸ்.பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி! எடப்பாடிக்கு தலைவலி!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கியதும், ஜெயலலிதா வளர்த்ததுமான அதிமுக இன்று அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஆக்கப்பூர்வமான இயக்கமாக இன்று அந்தக் கட்சி இல்லை.

நாங்களும் கட்சிக்குள் இருந்து பலமுறை போராடிப் பார்த்தோம். முக்கிய நிர்வாகிகள் கூறிய கருத்துகளைக்கூட தற்போதைய தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் கனத்த இதயத்துடன் இன்று அந்தக் கட்சியில் இருந்து வெளியேறுகிறோம். இத்தனை ஆண்டுகள் உழைத்த பிறகும், தாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

தமிழக வெற்றிக் கழகம்தான் எதிர்காலம் கொண்ட இயக்கம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். இந்த ஆட்சி வருங்காலத்திலும் முழு ஐந்து ஆண்டுகள் சிறப்பாக தொடரும் என்ற நம்பிக்கையுடன்தான் நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறோம்.

 'இது குதிரைப் பேரம் என்று கூறப்படுகிறதே?' என்ற கேள்விக்கு, ஒருவர் ஒரு கட்சியில் உண்மையாக உழைத்தும், அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல், யாரையும் மதிக்காத சூழ்நிலையால் வெளியே வந்தால், உடனே அவரை 'துரோகி' என்றும், 'குதிரைப் பேரம்' என்றும் சொல்கிறார்கள். ஆனால் இங்கே எந்தக் குதிரைப் பேரமும் நடைபெறவில்லை. யாரும் யாரையும் விலைக்கு வாங்கவில்லை. அனைவரும் தங்களது விருப்பத்தின் பேரில்தான் இந்தக் கட்சியில் இணைகிறார்கள். குதிரைப் பேரமோ, யானைப் பேரமோ எதுவும் இங்கே நடக்கவில்லை.

'எம்.எல்.ஏ. ராஜாவும் தற்போது கட்சியில் இணைந்திருக்கிறாரே?', அந்த அளவுக்கு தற்போதைய அதிமுக தலைமையின் மீது அதிருப்தி உள்ளது என்பதை அதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். அனைவரையும் அரவணைக்காத தலைமை, யாருடைய கருத்தையும் கேட்காத அணுகுமுறைதான் இந்த நிலைக்கு காரணம். வேறு எந்த காரணமும் இல்லை.

 'அதிமுகவை விட்டு வெளியேறிய பிறகு, தற்போது அந்தக் கட்சியை விமர்சிக்கிறீர்களே?', ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறுவது எளிதான விஷயம் அல்ல. நாங்கள் பல ஆண்டுகள் அந்தக் கட்சிக்காக உழைத்திருக்கிறோம். எங்களது சொந்த பணத்தைக்கூட செலவழித்து கட்சியை வளர்த்திருக்கிறோம். ஆனால் இன்று அந்தக் கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதையும் மதிப்பும் இல்லை. சம்பந்தமில்லாதவர்களை கொண்டு வந்து, சுயநல நோக்கத்துடன் பதவிகள் வழங்கப்படுகின்றன. நீண்ட காலமாக உழைத்தவர்களோ புறக்கணிக்கப்படுகிறார்கள். அந்தப் புறக்கணிப்பைத் தாங்க முடியாமல்தான் பலர் வெளியேறுகிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் மீது விமர்சனம் செய்வதைத் தவிர, அந்தத் தலைமையால் வேறு எதையும் சொல்ல முடியவில்லை. அது அவர்களுடைய வெளிப்பாடு. அதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது." என்றார் 

இதையும் படிங்க: அண்ணன் எடப்பாடியார் அவர்களே... கண்ணீருடன் விடைபெறுகிறேன்... ர.ர.க்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கமான கடிதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share