யாருடன் கூட்டணி?... முக்கிய முடிவெடுத்த ராமதாஸ்... அறிவிப்பு குறித்து ஜி.கே.மணி சொன்ன அதிரடி தகவல்...!
இரண்டொரு நாட்களில் மருத்துவர் ராமதாஸ் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என பாமக கௌரவ தலைவர் ஜிகே.மணி தகவல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிர்வாக குழு கூட்டத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜிகே.மணி. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி. பொதுச்செயலாளர் முரளி சங்கர். பொருளாளர் சையத் மன்சூர் உசேன். உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 21 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில் 20 பேர் கலந்து கொண்டனர். மாநில வன்னியர் சங்க தலைவர் புத.அருள்மொழி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. காலை 10:30 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 6:30 மணி வரை நடைபெற்றது.
7 மணி நேரம் இந்த நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாக குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பான அறிவிப்புகள் இரண்டொரு நாளில் அறிவிக்கப்படவுள்ளது. நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக கௌரவ தலைவர் ஜிகே.மணி: மருத்துவர் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் காலையில் இருந்து மாலை வரை நடைபெற்றது. இதில் நிர்வாக குழு நிர்வாகிகள் அனைவரும் தங்கள் மனதில் உள்ளதை பற்றி பேச சொன்னார். அனைவரும் பேசினார்கள். கூட்டணி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இரண்டொரு நாட்களில் மருத்துவர் ராமதாஸ் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார். மக்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு உள்ளது. கூட்டணி யாருடன் அமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நல்ல கூட்டணி அமையும் என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழல் தான் கூட்டணி முடிவு எடுப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: பாமக-வோட இந்த நிலைமைக்கு அன்புமணிதான் காரணம்! கொந்தளித்த ராமதாஸ்! 18 பக்க பதில் மனு தாக்கல்!
இதையும் படிங்க: தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?