அந்தக் கிழவனை மிதிச்சு..! ராமதாசை கொல்ல சொல்பவருக்கு அன்புமணி பாராட்டு… ஜி.கே. மணி பகிரங்க குற்றச்சாட்டு…!
ராமதாசை கொள்ளுங்கள் என கூறியவர்களை அழைத்து அன்புமணி பாராட்டுவதாக ஜி.கே. மணி குற்றம் சாட்டினார்.
சென்னையில் ஜி.கே மணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தன் மீது அன்புமணி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். அன்புமணி மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை நெருக்கடி சொல்லி மாறாது என்று ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
பாமகவில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி தான் என்றும் அவரது செயல்பாடுகளால் ராமதாஸ் கண்ணீர் வடித்ததாகவும் தெரிவித்தார். மனதளவில் கூட துரோகம் நினைக்காத தன்னை துரோகி என்று அன்புமணி பேசுவதாகவும் இது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் ஜி.கே. மணி தெரிவித்தார். பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு நான்தான் காரணம் என்று அன்புமணி பேச இருப்பதாகவும் ஜி.கே. மணி வருத்தம் தெரிவித்தார்.
அன்புமணிக்கு தேர்தலில் சீட்டு அளிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சராக வேண்டும் என்றும் பேசியது நான்தான் என்றும் கூறினார். என் அப்பா ராமதாசுக்கு அடுத்ததாக உங்களை தான் நினைக்கிறேன் என கூறியவர் அன்புமணி என்றும் குறிப்பிட்டார். அன்புமணியை இளம் வயதில் மத்திய அமைச்சராகி அழகு பார்த்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ் என்றும் கூறிய அவர், பாமகவில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்... தேர்தலில் போட்டியிட விருப்ப மனு... அன்புமணி முக்கிய அறிவிப்பு...!
நான் ஒருபோதும் அன்புமணிக்கு துரோகம் செய்யவில்லை என்றும் அன்புமணியை அமைச்சராக்க கூடாது என உறுதியாக இருந்தவர் காடுவெட்டி ஜெ.குரு எனவும் தெரிவித்தார். ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அன்புமணி பேசி இருப்பதாகவும் அன்புமணியை வெளியே வர சொல்லுங்கள் என நிர்வாகிகள் ராமதாஸிடம் கூறியதாகவும் அன்புமணி தம்பிகள் - தங்கைகள் படை என்று அமைப்பை உருவாக்கினோம் எனவும் தெரிவித்தார். ராமதாசை கொள்ளுங்கள் என பதிவிட்டவரை கூப்பிட்டு அன்புமணி பாராட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: விரைவில் மெகா கூட்டணி… திமுகவுக்கு தைரியம் இல்ல… அன்புமணி சரமாரி விளாசல்…!