×
 

ராமதாஸ் போன்ற தலைவரை கொச்சைப்படுத்தலாமா? கொந்தளித்த ஜி.கே. மணி…!

தைலாபுரத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் தொடங்கிய பிரச்சினை இன்று வரை அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையில் தீர்வு கிடைக்காமல் நடந்து வருகிறது. பாமகவின் தலைவர் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் தானே என ராமதாஸ் கூறுகிறார். மறுபக்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நான்தான் என அன்புமணி கூறி வந்தார்.

இருவருக்கும் இடையிலான பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனை கட்சியில் பிளவை ஏற்படுத்தியது. அன்புமணி அணி, ராமதாஸ் அணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ராமதாசை செயல் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கினார் ராமதாஸ். இருவருக்கும் இடையிலான பிரச்சினை தீர்வு ஏற்படாமல் நீண்டு வருகிறது. 

 சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. சேலத்தில் வரும் 29ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட்டுகிறார். இதைத்தொடர்ந்து ராமதாஸ் மீது அன்புமணி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ராமதாஸ் கூட்டி உள்ள பொதுக்கூட்டத்திற்கும் பாமகவிற்கும் சம்பந்தமில்லை என்றும் பொதுக்குழுவை கூட்டவும் தலைமை ஏற்கவும் தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு... விரைவில் கூட்டணியை அறிவிக்கும் ராமதாஸ்... ஜி.கே.மணி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்...!

இந்த நிலையில், சேலத்தில் 29ஆம் தேதி நடைபெறும் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பார் என தைலாபுரத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி பேட்டியளித்தார். ராமதாஸ் நடத்துவது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் என அன்புமணி கூறுகிறார் என்றும் உங்களுக்கு மனசாட்சி இல்லையா எனவும் ஜிகே மணி கேள்வி எழுப்பினார். 

சக்தி வாய்ந்த ராமதாஸ் போன்ற தலைவரை கொச்சைப்படுத்தும் விதமாக அன்புமணி தரப்பு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தில் தவறான தகவல்களை அளித்து அங்கு சிலரை கைகளில் வைத்துக்கொண்டு காரியத்தை நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: இது நடக்கும்னா பாமகவில் இருந்து வெளியேற தயார்… மனம் திறந்த ஜி.கே. மணி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share