×
 

'அறிவாலய அடிமையாக' மாறிப்போன கோவன்... மேடையில் வக்கிரப்பேச்சு... சீல் பிடித்த சிவப்பு சிந்தனை..!

நீ பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசாத. நீ உன்னுடைய ப்ரெண்டி கல்யாணத்துக்கு கோவாவுக்கு போனாய். அ

அதிமுக ஆட்சியில் அரசை விமர்சித்து பரபரப்பாக இயங்கி வந்த பாடகர் கோவன் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆளே காணாமல் போய்விட்டார். அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் கூட பரவியது. அந்த அளவுக்கு ஆழ்ந்த அமைதி நிலைக்கு சென்றுவிட்டார் கோவன். 

2015-ல், "மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அரசை விமர்சித்ததற்காக, தேசத்துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். கோவனின் பாடல்கள் பெரும்பாலும் டாஸ்மாக் எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, மற்றும் திராவிட இயக்கக் கொள்கைகளை மையப்படுத்தியவை. சமீபத்தில், நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்து, திராவிட இயக்க தமிழர் பேரவை மாநாட்டில் கோவன் பேசியது அநாகரிகத்தின் உச்சம்.

அந்த மேடையில் பேசிய கோவன், ''தமிழநாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம். தம்பி நான் ஒன்னு சொல்கிறேன். உன் வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று சொல்லித்தான் உன் மனைவி உன்னை விட்டு ஓடிப்போனது. முதல்ல அதை புரிஞ்சுக்கோ. நீ பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசாத. நீ உன்னுடைய ப்ரெண்டி கல்யாணத்துக்கு கோவாவுக்கு போனாய். அதுவும் தனி விமானத்துல போன. இதெல்லாம் பர்சனல் லைஃப்... வேற வழி இல்ல சொல்ல வேண்டி இருக்கிறது. அந்த விமானத்துல இன்னொரு பொண்ணும் இருந்துச்சு. அது யாரு தெரியுமா, விஜயோட உட்பி. அதைவிட முக்கியமானது துணைக்கு நீ கூட்டிப்போனது அவன் ஒரு சங்கி. கொண்டைய மறைக்காம விட்டுட்டியே குமாரு'' என பேசியுள்ளார். ஒரு சிவப்பு சிந்தனையாளர் இப்படி மேடையில் தனிப்பட்ட, பெண்கள் குறித்து இவ்வளவு வக்கிரமாகப் பேசலாமா? என பலரும் கோவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுகவில் பொன்முடி, செந்தில் பாலாஜி விக்கெட்டுகள் காலி.. இனி தொடர்ந்து விக்கெட்டுகள் விழும்.. ஹெச். ராஜா தாறுமாறு!

  ''வாழ்நாளில் ஒரு சிவப்பு சட்டை கம்யூனிஸ்ட் ஒருவர் இவ்வளவு இழிவாக பேசுவதை இன்று தான் காண்கின்றோம். சிவப்பு எனப்படும் பேராயுதம், நில உரிமை பேசியிருக்கின்றது, கூலிகளின் பணி வரையறைகளை பேசி இருக்கின்றது. பண்ணையார்களின் ஆதிக்க எதிர்ப்பு பேசியிருக்கின்றது. அதிகார வர்க்கங்களின் அடாவடிகளை பேசி இருக்கின்றது. ஆனால் கோவன் போன்ற ஆட்களின் பேச்சுகளால் சிவப்பு சீல் பிடிக்க தொடங்கியுள்ளது. இவரைப் போன்ற சீல் பிடித்த தொங்கு சதைகளை அறுத்து எறிவது தான் சிவப்பு சிந்தனையாளர்களுக்கு அழகு.

அரசியலில் விஜயை எதிர்கொள்ள கருத்தியல் ரீதியாக Narrative set செய்யலாம் தவறில்லை. ஆனால் விஜய்யை இழிவுபடுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக உடன் பயணித்த நடிகைகளை இழிவுபடுத்துவதை எவ்வாறு ஏற்க முடியும்? அதுவும் உடன் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு பொதுமேடையில் இவ்வாறு பேசலாமா? இதுதான் சிவப்பு சிந்தனையா? பொதுமக்கள் உங்களை பார்த்து காரி உமிழ மாட்டார்களா? என கோவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நான் கூட இது ஏதோ பழைய வீடியோ போல இதைய போயி எதுக்கு இப்ப போடனும்ன்னு நெனச்சேன், இந்த வீடியோ வெளியிட்டிருக்கும் சேனலை போயி பார்த்தால் தான் தெரியுது சமீபத்திய வீடியோ போல்ருக்கு.

திராவிட கழகத்தோட மேடைல பெண்களை கொச்சைப்படுத்தி பேசிட்டு இருக்கு இந்த மது ஒழிப்பு போலி போராளி!!

ஏம்மா… pic.twitter.com/Auw7GO4jlt

— Sonia Arunkumar (@rajakumaari) April 29, 2025

 

2015ம் ஆம் ஆண்டு அதிமுக அரசை விமர்சித்ததால் பாடகர் கோவன் தேசத்துரோக சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது பாடகர் கோவனுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர். ஜெயலலிதாவை விமர்சித்து பாடல் பாடியவர் மீது தேசத்துரோக வழக்கு போடுவது நியாயமா? என பலரும் கேள்வி எழுப்பினர். தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கும் நிலையில் குற்ற சம்பவங்கள் நடந்தாலும் கோவன் கண்டுக்கொள்வது இல்லை. குறிப்பாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் அதிகமானவர்கள் பலியானபோது கோவன் எங்கு சென்றார் என்று பலரும் வலைதளங்களில் கேள்வி கேட்டனர்.

கோவன் முழுமையான திமுகவின் ஆதரவாளர். இதனால் தான் அவர் தற்போது கள்ளச்சாராய பலியை கண்டுக்காமல் உள்ளார். இதையடுத்து அவர் ஒரு பாடல் பாடி வெளியிட்டார். அதில் திமுகவின் திட்டங்களை பல இடங்களில் புகழ்ந்தும், பாஜகவை விமர்சனம் செய்தும், இடையிடையே டாஸ்மாக்கை மூட முடியுமா? என்று சில வரிகளும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் விஜயை பற்றி பாட்டுப்பாடியும், அவரை நடிகைகளுடன் இணைத்தும் கடுமையாக விமர்சித்துள்ளார் கோவன். 

இதையும் படிங்க: விஜய்யைப் பார்க்க கூட்டம் வரும்.. ஆனா ஓட்டு வராது.. ராஜேந்திர பாலாஜி தாறுமாறு கலாய்ப்பு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share