×
 

தகாத வார்த்தைகளால் கோயில் பூசாரிக்கு அர்ச்சனை... அடாவடி செய்த அரசு பேருந்து நடத்துனருக்கு நேர்ந்த பரிதாபம்...!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு பேருந்தில் பயணிகளிடம் அடாவடி செய்த நடத்துனர்  சஸ்பெண்ட்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கோயிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை குடும்பத்தினருடன் நெல்லை பேருந்து நிலையத்திலிருந்து  வள்ளியூருக்கு செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது நெல்லையில் இருந்து வள்ளியூர் வழியாக நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏற முயன்ற போது வள்ளியூருக்கு செல்லும் பயணி என்று தெரிந்ததும் பேருந்தை நிறுத்தாமல் இயக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி குடும்பத்தினர் ஓடி சென்று பேருந்தில் ஏறி வள்ளியூருக்கு டிக்கெட் கேட்டபோது வள்ளியூருக்கு செல்லாது என நடத்துனர் அந்தோணி என்பவர்  பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: அண்டை மாநிலங்களுக்கான ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்... தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் எடுத்த அதிரடி முடிவு...!

மேலும், பேருந்தில் இருந்த மற்ற  பயணிகளை நடத்துனர். தூண்டிவிட்டு இந்த பேருந்து வள்ளியூர் போகாது என சொல்லுங்கள் எனக் கூறியிருக்கிறார். அதற்கு அந்த குடும்பத்தினர் இந்த பேருந்து வள்ளியூர் செல்லக்கூடிய பேருந்து தானே.  நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும் பேருந்து மட்டும் தானே வள்ளியூர் ஊருக்குள் செல்லாமல் செல்லும். 

இந்த பேருந்து ஏன் செல்லாது என கேள்வி எழுப்பியுள்ளனர். வள்ளியூர் போகாது என அடாவடியாக நடத்துனர் பேசி இருக்கிறார்.

இருந்தாலும் அந்த குடும்பத்தினர் அதே பேருந்தில் பயணம் செய்து கொண்டுள்ளனர்.
அவர்களை வசைப் பாடும் விதமாக நடத்துனரும் மற்ற பயணிகளுடன் சேர்ந்து கொண்டு வள்ளியூருக்கு வேண்டா வெறுப்பாக பயண டிக்கெட் கொடுத்து இருக்கிறார். தொடர்ந்து பேருந்தானது சென்று கொண்டு இருக்கும் போதே அந்த குடும்பத்தை சக பயணிகள் தகாத வார்த்தைகள் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பேருந்து வள்ளியூர் ஊருக்குள் வந்த போது சுப்பிரமணி குடும்பத்தினர் இறங்கி பேருந்து முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஆனது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. தொடர்ந்து போலீசார் வந்து சமாதானம் செய்ததை அடுத்து  பேருந்து புறப்பட்டு சென்றது.  இதனால் வள்ளியூர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து நெல்லை மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று விசாரணை செய்த போக்குவரத்து கழக பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நடத்துனர் அந்தோணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 
 

இதையும் படிங்க: தெலங்கானா: நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்து-லாரி..!! பரிதாபமாக பறிபோன 17 உயிர்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share