×
 

வாக்குறுதிகளை கிடப்பில் போட்ட திமுக! அதிருப்தியில் அரசு ஊழியர்கள்! யாருக்கு போனது ஓட்டு?!

அரசு ஊழியர்கள், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவன பணியாளர்களில் அதிகம் பேர், 'நோட்டா'வுக்கு ஓட்டுகளை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவன பணியாளர்கள் பலர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறுகையில், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசு துறைகள், மின்வாரியம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தி.மு.க. 2021 சட்டசபைத் தேர்தலில் உறுதியளித்தது. 

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு பதிலாக புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது. பல ஆயிரம் காலிப்பணியிடங்களும் இன்னும் நிரப்பப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், பொதுத் துறை பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது” என்றனர்.

இதையும் படிங்க: இந்த முறை நோட்டாவுக்கு டாடா தான்!! நோட்டா ஓட்டு கண்டிப்பா குறையும்!! நிபுணர்கள் கருத்து!

ஏற்கெனவே 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வும் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். “இந்த முறை ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்குமா என்பது சந்தேகம்தான். த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஓட்டளித்தாலும் அவர் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, பல அரசு ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஜனநாயக கடமையை நிறைவேற்றும் அதே வேளையில், “யாருக்கும் ஆதரவு இல்லை” என்பதை தெளிவாகப் பதிவு செய்யும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால் இந்தத் தேர்தலில் நோட்டா ஓட்டுகளின் எண்ணிக்கை கடந்த தேர்தலைவிட கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத் துறை பணியாளர்களின் இந்த அதிருப்தி, தேர்தல் முடிவுகளில் சில தொகுதிகளில் எதிரொலிக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். பழைய ஓய்வூதியம் மற்றும் காலிப்பணியிடங்கள் நிரப்பல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகள் தொடர்ந்து அரசியல் களத்தில் முக்கியப் பேச்சாக இருக்கும் என்பது உறுதி.

இதையும் படிங்க: அதிமுகவின் கொங்கு கோட்டையில் ஓட்டை!! காரியத்தை கச்சிதமாய் முடித்த செந்தில் பாலாஜி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share