×
 

ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... பிரச்சார வாகனத்தில் கூட புது யுக்தியை கையில் எடுத்த தவெக...!

GPS-கருவி பொருத்தப்பட்ட த.வெ.க பிரச்சார ஆட்டோ வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டதால் ஓட்டுனர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாரபத்தி- ஆவியூர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாட்டு வேலைகள் விரைவாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவதால் அதற்கான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் மொத்தம் 1.50 லட்சம் நாற்காலிகளுடன், மாற்றுத்திறனாளிகளுக்கென சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொருவருக்கும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. 400 தற்காலிக கழிப்பறைகள், 50-க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள், தேவைக்கேற்ப சிசிடிவி கேமராக்கள், 420 ஒலிபெருக்கிகள், 20,000 மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளது, மாநாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதற்காக 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை, ஊரெங்கும் விளம்பரங்கள், வீடு வீடாக அழைப்பு என்று மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு களைகட்டி வருகிறது.

இதையும் படிங்க: அடிதூள்..!! 2026 தேர்தலில் விஜய் களமிறங்கப்போகும் தொகுதி எது தெரியுமா? - விலகியது சஸ்பென்ஸ்

மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டிற்கு மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக, பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் GPS-கருவி பொருத்தப்பட்ட  பிரச்சார ஆட்டோ வாகனங்களை மாநாட்டு திடலில் கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்கள் துவக்கி வைத்தார்.

வாகன பிரச்சாரங்களில் ஈடுபடும் ஓட்டுனர்கள் எங்கு செல்கிறார்கள் ஒரு நாளைக்கு எத்தனை கிலோமீட்டர் செல்கிறார்கள் வாகனத்தை தேவையில்லாமல் எங்கு நிறுத்துகிறார்கள், கூட்டம் இருக்கும் இடத்தில் நிறுத்துகிறார்களா, இல்லை அவர்கள் வீட்டில் நிறுத்துகிறார்களா என்ற பல்வேறு வகையான தகவலை இந்த ஜிபிஎஸ் கருவிகள் மூலம் பெற்று அவர்களை உடனடியாக வேறு இடத்திற்கு அனுப்ப இந்த இயந்திரம் உதவி வருகிறது. இதனால் அவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.

 

 

இதையும் படிங்க: மதுரை மாநாடு முடியட்டும்; தமிழக அரசியலில் தடலாடி மாற்றம் நடக்கும் -  மார்தட்டும் தவெக அருண்ராஜ்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share