×
 

மதநம்பிக்கையில் விளையாட்டா.? மேனாமினுக்கு வேலை வேணாம்... H.ராஜா காட்டம்..!!

அமைச்சர் ராஜ்மோகன் பேச்சை சுட்டிக்காட்டி H. ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

மக்களின் மதநம்பிக்கையோடு விளையாடாமல் ஆக்கப்பூர்வமான வேலைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் H. ராஜா வலியுறுத்தினார். "மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாருமே வரக்கூடாது" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத அடையாளங்களைப் புறக்கணிப்போம் என்று மேடையில் முழங்கிவிட்டு, பின்புறமாக, விபூதி பூசுவது, சாமி கயிறு கட்டுவது போன்ற இந்து மக்களின் உரிமையை மட்டும் ஒடுக்கத்தான் இந்த அறிவிப்போ என்ற சந்தேகம் எழுகிறது என்று கூறினார்.

ஏற்கனவே இந்து விரோத திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்த நினைத்த சதித்திட்டத்தையே தற்போது வேறு வார்த்தைகளில் தவெக அமைச்சர் உரைத்திருப்பது தவெகவுக்கும் திமுகவுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை உணர்த்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். 

 திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற விடாமல் தடுப்போம் என்று கூறியதில் தொடங்கி, தற்போது மத அடையாளங்கள் கூடாது என்று சொல்வது வரை நாத்திக திமுகவின் நாற்றமடித்த கொள்கைகளையே தூக்கிப்பிடிப்பது தான் மாற்று சக்தியின் லட்சணமா என்று H.ராஜா விமர்சித்தார். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பள்ளிக்குழந்தைகள் மீது திணித்து தனிமனித வழிபாட்டு உரிமையைப் பறிப்பது தான் தூய சக்தியா? என கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: அந்த கயிறு கண்ணை உறுத்துதோ.? இந்துக்கள் மீதான வெறுப்பு... தவெகவை விளாசிய வானதி சீனிவாசன்..!!

அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதிலும், காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதிலும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கவனம் செலுத்த வேண்டுமே, தவிர மதச்சார்பற்ற அரசு என்ற போர்வையில் தேவையற்ற மேனாமினுக்கு வேலைகளில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share