×
 

பிரதமர் மோடிக்கு போட்டியா?... ராகுல், விஜய் எல்லாம் அந்த லிஸ்ட்லையே இல்லை... அடித்துச் சொன்ன எச்.ராஜா...!

பிரதமர் மோடிக்கு எவரும் போட்டியில்லை - அவர் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா கருத்து

சபாநாயகர் சட்டமன்றத்தில் முதலில் திருக்குறள், தேவாரம், திருவாசகம், குரான்சொல்ல வேண்டும். 100 நாள் சினிமா போல தமிழக வெற்றிக்கழக ஆட்சி  காரைக்குடி செய்தியாளர் சந்திப்பில் பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா தெரிவித்தார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்த போது, என் மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் நீதி வென்றுள்ளது என்று கூறினார் மேலும் பிரதமர் வேட்பாளர் விவாதத்திற்கு அப்பாற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு  போட்டி எவரும் இல்லை.

ராகுல் காந்தி, விஜய் ஆகியோர் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருப்பதாக கூறுவது தேவையில்லை.  பிரதமராக அடுத்து யார் வரவேண்டும் என மோடி நினைக்கும் வரை அவர் தான் பிரதமராக இருப்பார்.  அடுத்து அவர் யாரை நியமிக்கிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என்று கூறினார்.

இதையும் படிங்க: நேபாள பிரதமருடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி! வெள்ள மீட்புப் பணிகளுக்கு முழு ஆதரவு என உறுதி!

சபாநாயகர்  மதச்சார்பின்மை அரசு என நினைத்தால் சட்டமன்றத்தில் முதலில் திருக்குறள் சொல்ல வேண்டும் பிறகு தேவாரம் சொல்ல வேண்டும் ஏன்? என்றால்  பெரும்பான்மை இந்துக்கள் வசிக்கும் மாநிலம். திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபஞ்சம், குர்ஆன் இதை எல்லாத்தையும் சொல்லனும்.

கிறிஸ்தவ திருச்சபை மாறி நடப்பதாக பத்திரிக்கையாளருக்கு கேள்வி எழுந்துள்ளது. எனக்கு வரவில்லை, அது தப்பு என்பதை சபாநாயகர் புரிந்து கொள்ள வேண்டும்.100 நாள் சினிமா போல தமிழக வெற்றிக்கழக ஆட்சி - 6 மாதத்திற்கு பிறகு ஆட்சி குறித்து விவரமாக கூறுகிறேன் என்று கூறினார்

இதையும் படிங்க: “காலத்தின் கட்டாயம்...” - சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய மெசெஜ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share