×
 

“பாபர் மசூதியைப் போல் சிக்கந்தர் தர்காவிலும்”...எச்.ராஜா சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்... ஆடிப்போன திருப்பரங்குன்றம்...!

 நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமை என்று உதயநிதி சொன்னார், இந்து என்று சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை.

திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் திருநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்களை பாஜக முகூர்த்த தலைவர் எச்.ராஜா நேரடியாக வந்து அவர்களை சந்தித்தார். தொடர்ந்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:  முருகனும் ஸ்டாலினும் ஒன்று என்று யாரோ பேசினார்களாம். கபர்தார், ஹிந்து விரோதி உதயநிதி ஸ்டாலின். நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமை என்று உதயநிதி சொன்னார்,  ஹிந்து என்று சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. ஸ்டாலின் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கொள்ளிக்கட்டையே உதயநிதி தான். அவர் பேசிய இந்து விராத தீய பேச்சு தான். அதனால் ஜாஸ்தி பேச வேண்டாம் என்று முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பையனை அடக்கி வையுங்கள்.

 குடும்பம், கட்சி, அரசு என எதையும் உங்களால் அடக்கி வைக்க முடியவில்லை. இருந்தாலும் உங்கள் பையனை கொஞ்சம் அடக்கி வையுங்கள் பூரண சந்திரனின் தியாகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்.  இது ஆன்ட்டி இந்து கவர்மெண்ட். பாஜக அலுவலகத்திலும் ஆண்டு தோறும் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறோம். அது பிரச்சனை இல்லை. முதல்வர் அவர்களே கொஞ்சம் உணர்வுக்கு வாருங்கள். ஆன்ட்டி முருகனாக இருந்தால், முருக பக்தர்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள். 

சேகர் பாபு யாரு. அவரின் சின்ன எஜமான் கிறிஸ்தவன் என்று கூறிய போது இவர் ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லாமல் அல்லேலூயா என்று சொன்னார் இந்த அல்லேலுயா பாபு. ஒரு பாதிரியார் சொல்கிறார் சேகர் பாபு ஒரு கிறிஸ்தவர் என்று. அவர் கிறிஸ்தவர் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அவர் நடந்து கொண்டது இந்து எதிரானது. அறநிலையத்துறை கோவில் பணத்தை திருடி தின்று இருக்கிறார்கள். கோவிலில் கொள்ளை அடிக்கிறீர்கள். முருகன் மாநாட்டிற்கு நடைபெற்றதற்கு கணக்கு காட்டியிருக்கிறார்களா.முதல்வர் இந்து விரோத தீய சக்தி இல்லை என்றால் நடவடிக்கை எடுத்திருப்பார் அப்படி செய்யாததால் தேர்தலில் மக்கள் உங்களை தூக்கி எறிவார்கள். 

இதையும் படிங்க: குறிச்சி வச்சிக்கோங்க... இன்னையோட இதை நிறுத்தலைன்னா பின்விளைவுகள் பெருசா இருக்கும்... தமிழக அரசை எச்சரித்த எச்.ராஜா...!

சிக்கந்தர் பாதுஷாவிற்கு கோரிப்பாளையம் மசூதியில் கல்லறை உள்ளது என்று சுற்றுலாத்துறை கையேடு சொல்கிறது. ஒருவருக்கு இரண்டு இடத்தில் கல்லறை இருக்க முடியாது. எப்படி ராமஜன்ம பூமியில் கட்டிடத்தை சுற்றி தொல்லியல் துறை அகழ்வாய்வு நடத்தி அதில் கோவில் இடித்து தான் கட்டப்பட்டது என்று சொன்னதைப் போல திருப்பரங்குன்றம் முருகன் மலை உருவ அமைப்பு முகமதியர்கள் எடுத்தார்கள் ஆனால் அதை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும். அதில் உருவங்களை பார்த்தாலே ஹிந்து உருவம் தெரியும். அதன் அமைப்பின் உண்மை தன்மை பற்றி தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவிற்கு திடீர் சப்போர்ட்... பாஜகவை சூசமாக சாடிய டிடிவி தினகரன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share