ஹாப்பி 75th பர்த்டே ஓபிஎஸ்!! பிறந்தநாள் கொண்டாடும் ஓ.பன்னீர்செல்வம்!! இன்று கூட்டணி அறிவிக்க வாய்ப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் காலை முதலே தொண்டர்கள் ஓபிஎஸ்சை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜனவரி 14, 2026) தனது 75வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார். தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் காலை முதலே தொண்டர்கள் அலைமோதினர்.
காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து, சால்வை அணிவித்து, இனிப்புகள் வழங்கி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ஓபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அனைவருடனும் சிரித்த முகத்துடன் பேசி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இடையே மிக முக்கியமான செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது இன்று அறிவிக்கப்படலாம் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: விஜய்க்கு மறைமுகமாக உதவும் பாஜக!! ஜனநாயகன் சர்ச்சையின் மற்றொரு பின்னணி! அரசியலில் சகஜமப்பா!
அதிமுகவுடன் இணையாத நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு மூன்று முக்கிய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது:
- தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜயுடன் கூட்டணி
- பாஜகவுடன் நெருங்கி இணைந்து போட்டியிடும் வாய்ப்பு
- திமுக அணியில் இடம் பெறும் வாய்ப்பு
இந்த மூன்று வாய்ப்புகளில் எது நிறைவேறும் என்பது இன்றைய பிறந்தநாள் நிகழ்வுகளின் போது அல்லது மாலை நேரத்தில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்கள் மத்தியில் இந்த கூட்டணி அறிவிப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் 75வது பிறந்தநாள் வாழ்த்துகள் மட்டுமின்றி, அவரது அரசியல் எதிர்காலம் குறித்தும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வம் நிலவுகிறது.
இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி, 3 அமைச்சர் பதவி!! எடப்பாடியிடம் டீல் பேசிய அமித்ஷா!! துறைகள் கன்பார்ம்!!