×
 

மகாராஷ்டிரா காங்கிரசுக்கு புதிய தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல்.. ராஜீவ் முத்திரையுடன் காங்கிரசின் புதிய மறுமலர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஹர்ஷ்வர்தன் சப்கல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த நானா படோல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மாநில தலைவராக பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு பதிலாக புதிய தலைவராக ஹர்ஷ்வர்தன் சப்கல் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடைய நியமனம் மாநில அளவிலான ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் ஒப்பிட்ட அளவில் மிகவும் குறைவாகவே அறியப்பட்ட  ஒரு சாமானியராகவே அவர் இருந்தார்.

இருப்பினும் சிவில் சமூகத்தினரும் சமூக ஆர்வலர்களும் இயல்பாக அவரை வரவேற்றனர். இதை ஆச்சரியகரமான ஒரு மகிழ்ச்சி என்று அவர்கள் கருதினார்கள். சாதாரண மக்களிடம் அவருக்கு கிடைத்த இந்த வரவேற்பு அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியது அவருடைய சாதாரண சாமானிய பின்னணி தான் இந்த பரபரப்புக்கு காரணமாகும். அரியானா மகாராஷ்டிரா மற்றும் டெல்லி சட்டமன்ற தேர்தல்களில் படுதோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவிலான நிறுவன அரசியலமைப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் முத்திரையும் அவருடைய சமூக நீதிக்கான முக்கிய கருத்தும் இடம் பெற்றுள்ளன. 

இதையும் படிங்க: பள்ளி குழந்தைகளின் ‘முட்டையில் கை’ வைத்த மகாராஷ்டிரா அரசு: செலவைக் குறைக்க முடிவாம் ...

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த மறு சீரமைப்பில் கட்சியின் 13 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள், இரண்டு மாநில தலைவர்கள் மற்றும் இரண்டு புதிய பொதுச் செயலாளர்களை நியமித்துள்ளது. ராகுலின் முக்கிய திட்டமான எஸ்சி எஸ்டி ஓபிசி சிறுபான் சிறுபான்மையினருக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல் காங்கிரஸின் நிர்மாண கட்டமைப்பை மறுசீரமைப்பதில் காணப்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு பொதுச் செயலாளர்களின் ஒருவர் முஸ்லிம் முகம். மற்றவர் முக்கிய ஓபிசி தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகேல் ஆவார்.

 இதேபோல் ஒன்பது புதிய மாநில பொறுப்பாளர்களில் மூன்று பேர் ஓபிசி களை சேர்ந்தவர். ஹரிஷ் சவுத்ரி, அஜய்குமார், லல்லு மற்றும் பிகே ஹரி பிரசாத் ஆகியோர்தான் அவர்கள். ஒருவர் பட்டியல் இனப் பிரிவை சேர்ந்தவர் கே ராஜு மற்றவர் பழங்குடி பின்னணியை சேர்ந்த சப்தகிரி உலகா. சமீபத்தில் இரண்டு மாநிலத் தலைவர்களின் நியமித்திருப்பதும் இதே போன்ற உணர்வுகளை வலுப்படுத்துகிறது மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்த்தன் சப் கல்.

ஓ பி சி இனத்தைச் சேர்ந்தவர் ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் தலித் முகம். புதிய நியமனங்களுடன் கட்சியின் முடிவு எடுக்கும் முறையில் இப்போது 70 சதவீதத்திற்கும் அதிகமான பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட்ட பிரிவினிடமிருந்து கிடைத்துள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.  பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான காங்கிரசின் தாக்குதல்களுக்கு அமைப்பில் உள்ள இந்த சமூக அமைப்பு கூர்மையை அளிக்கும் என்று பல தலைவர்கள் நம்புகிறார்கள்.

இதையும் படிங்க: அதிர்ச்சி… ரூ.1 லட்சமாக உயரப்போகும் தங்கம் விலை… ட்ரம்ப் கையில் ட்ரம் கார்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share