×
 

பள்ளிகள் திறப்பு நாளிலேயே ஏகப்பட்ட கூத்து... குளறுபடி..! பொளந்தெடுத்த H. ராஜா..!!

பள்ளிகள் திறக்கப்பட்ட போது ஏற்பட்ட குளறுபடிகளை சுட்டிக்காட்டி H. ராஜா விமர்சித்தார்.

மாற்றம் தருவோம் என்று வந்த தவெக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இவ்வளவு ஏமாற்றங்களா என பாஜக மூத்த தலைவர் H.ராஜா கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்றுதான் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதில் முதல் நாளே ஏகப்பட்ட கூத்துக்களும், குளறுபடிகளும் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

சிவகங்கை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் அசுத்தம். திருப்பத்தூர் மாவட்டம் திருமால்நகர் பள்ளியில் கழிவறை ஏற்பாடுகள் சரியில்லை. கடலூர் மாவட்டம் பெரிய நெற்குணம் கிராமத்தில் இயங்கி வரும் பால்வாடி பள்ளிக்கு மின்வசதி, குடிநீர் வசதி, போர்வெல் வசதி என எதுவுமே செய்யப்பட்டிருக்கவில்லை. நாகை மாவட்டம் வடக்காத்தூர் கிராமத்தில் இடிக்கப்பட்ட பால்வாடி கட்டிடம் இன்னமும் உயிர் பெறவில்லை என்று கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஒரு தொடக்கப்பள்ளியில் இன்று பெரும் தீ விபத்து. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள வெங்கட்ராயபுரம் மரியா கிரேஸ் உயர்நிலைப்பள்ளியோ திறக்கப்படாமல் பூட்டுக்களோடு காட்சியளித்தது என்று தெரிவித்தார். இப்படி கடும் மன உளைச்சலை மாணவர்களுக்கு ஏற்படுத்திய அனைத்தும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்து எல்லா வித முன்னேற்பாடுகளையும் பள்ளிகளில் செய்து விட்டோம் என செய்தியாளர்களிடம் பெருமையாக பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இப்போது எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்? என்று கேட்டார்.

இதையும் படிங்க: ஆய்வுகள் போதும்... ஆக வேண்டியத பாருங்க..! விளாசிய H. ராஜா..!!

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் வேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தவெக நிர்வாகிகள் விஜய் புகைப்படத்தோடு சென்று சிறு குழந்தைகளிடம் நிகழ்த்தியிருக்கும் அரசியல் பிரச்சாரம் கடும் கண்டனத்திற்குறியது என்றார்.

தேர்தல் சமயத்தில்தான் தமிழக குழந்தைகளை உங்கள் கட்சிப் பிரச்சாரத்திற்கு உபயோகப் படுத்திக் கொண்டீர்கள்., இன்னமும் இது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதை மறக்க வேண்டாம் என்றும் ஆட்சி அமைத்த பிறகாவது,பிஞ்சு மனங்களில் நஞ்சைக் கலக்கும் விதமான அரசியல் ரீதியிலான விழாக்கள் பள்ளிக்கூடங்களில் தேவையா? முறைதானா? எனவும் சரமாரியாக முதல்வர் விஜயை சாடினார். இவ்விஷயத்தில் உங்களது ஆச்சர்யக்குறி தவெகவினரை நீங்கள் தட்டி வைத்தே தீர வேண்டும் என்றும் தடுக்க மறுத்தாலோ, மறந்தாலோ உங்களது ஆட்சியே கேள்விக்குறியாகி விடும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருந்தாத திமுக..! வருந்தாத உதயநிதி..! பூந்து விளாசிய H. ராஜா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share