×
 

அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் மகள் இந்திரா. இவரது கணவர் துவாரக நாதன் இவர்கள் குடும்பத்துடன் செவாலியர் சிவாஜி நகரில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று 21.11.25 மதியம் 1:30மணி அளவில் கோவையில் இருந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழு இரண்டு இன்னோவா காரில் இந்திராவின் வீட்டிற்கு வருகை தந்தனர். 

இதையும் படிங்க: "கொத்து, கொத்தாக நீக்கப்படலாம்"... திமுகவினரை எச்சரித்த அமைச்சர் ஐ.பெரியசாமி...!

பின்னர் வீட்டுக்குள் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. 

தகவல் அறிந்து இந்திராவின் வீட்டின் முன்பு ஏராளமான கட்சித் தொண்டர்கள் குவிந்து உள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு என்பது வரி ஏய்ப்பு, வரி விலக்கு மோசடி போன்றவற்றை விசாரிக்கும் ஒரு துறையாகும்.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு, அவர் மகன் ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி வீடுகள் மற்றும் இவர்களுக்கு சொந்தமான இரண்டு மில்களில் அமலாக்கதுறையினர் சோதனை செய்தனர்.

 

இதில் இந்திராணியின் வீட்டில் மட்டும் சுமார் 15 மணி நேரம் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share