×
 

மனைவி ஜிம்மிற்கு சென்றதால் ஆத்திரம்! இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற கணவன்! நாடகமாடியது அம்பலம்!

உத்தர பிரதேசத்தின் மொராதாபாதில், 'ஜிம்' எனப்படும், உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற மனைவியை கண்டித்த கணவர், ஆத்திரத்தில் அடித்துக் கொன்றார்.

மொராதாபாத்: உடற்பயிற்சி கூடத்துக்கு (ஜிம்) சென்ற மனைவியை கண்டித்த கணவர், ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொராதாபாத்தைச் சேர்ந்த ஷோபித் குப்தா (பழைய இரும்பு வியாபாரி) என்பவருக்கும் அவரது மனைவி பூனம் (35) என்பவருக்கும் திருமணமாகி 7 வயது மகள் ஒருவர் உள்ளார். பூனம் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு தினமும் சென்று வந்துள்ளார். இதற்கு ஷோபித் குப்தா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இருவருக்கும் இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான சண்டை முற்றியது. ஆத்திரமடைந்த ஷோபித் குப்தா, மனைவி பூனத்தை இரும்பு கம்பியால் தலையில் வலுக்கட்டாயமாகத் தாக்கினார். இதில் படுகாயமடைந்த பூனம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படிங்க: முறைதவறிய காதல்!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்!! அவசர அவசரமாக புதைக்கும் போது சிக்கினான்!

மனைவியின் உடலை அப்புறப்படுத்த வழியின்றி, ஷோபித் குப்தா ஏழு மணி நேரம் வரை சடலத்தின் அருகிலேயே தவித்துக்கொண்டிருந்தார். வெளியே சென்றிருந்த 7 வயது மகள் வீடு திரும்பியபோது, “அம்மா எங்கே?” என்று கேட்டாள். “அம்மா பக்கத்து அறையில் இருக்கிறார்” என்று கூறி, குழந்தையை சாப்பிட வைத்து தூங்கச் செய்தார்.

பின்னர், போலீசுக்கு போன் செய்த ஷோபித் குப்தா, “மனைவி கீழே விழுந்து காயமடைந்துவிட்டார்” என்று தெரிவித்தார். போலீசார் வந்து விசாரித்தபோது, உண்மையை ஒப்புக்கொண்ட அவர், மனைவியை அடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

உடனடியாக ஷோபித் குப்தாவை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குடும்பம் நடத்த வராததால் வெறிச்செயல்..! மனைவி, மச்சானை வெட்டிய கணவன் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share