×
 

"சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன்": வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் அமைச்சர்!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி திமுகவில் இணையவுளதாகத் தகவல் வெளியான நிலையில், சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

அண்மையில் திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான முத்துச்சாமியுடன் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஒரு கோயிலில் சாமி தரிசனம் செய்ததையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி திமுகவில் இணையப்போவதாகப் பரவிய செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

திமுகவில் இணையப்போவதாகப் பரவிய செய்தி முற்றிலும் வதந்தி என மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி, "சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் சேர்ந்து கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு ஏற்பட்ட அரசியல் பரபரப்பு குறித்து, அமைச்சர் முத்துச்சாமியும் விளக்கம் அளித்துள்ளார். கோயில் சீரமைப்புப் பணிகள் தொடர்பாகத் தான் தங்கமணியுடன் பேசினேன். தங்கமணியுடன் அரசியல் பேசவில்லை" என அமைச்சர் முத்துச்சாமி தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அவருக்கு டெய்லி நியூஸ்ல வரணும்... அதான் இவ்வளவு பேச்சு..! எடப்பாடியை வசைப்பாடிய அமைச்சர்...!

இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தது, அதிமுகவின் முக்கியப் புள்ளியான தங்கமணி திமுகவுக்குச் செல்லக்கூடும் என்ற ஒரு பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இருவரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தி.மு.க.வில் இணையும் தகவல் வெறும் வதந்தியே என முன்னாள் அமைச்சர் தங்கமணி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் தீவிரம்..!! அடுத்த முக்கியப்புள்ளி நீக்கம்..!! இபிஎஸ் அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share