×
 

அப்பாவு வெற்றி..! சுப்ரீம் கோர்ட் பேச்சை மீறிய ஹைகோர்ட்..!! இன்பதுரை மேல்முறையீடு..!!

அப்பாவு வெற்றி என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்ப துரை மேல்முறையீடு செய்துள்ளார்.

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி மிகுந்த கவனத்தை ஈர்த்த ஒரு தொகுதியாக மாறியது. அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை, திமுக வேட்பாளர் எம். அப்பாவை வெறும் 104 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த மிகக் குறுகலான வெற்றி இன்பதுரையை எம்எல்ஏவாக அமர்த்தியது. ஆனால் அது நீண்ட நீதிப் போராட்டத்தின் தொடக்கமாகவும் அமைந்தது.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட உடனேயே, தோல்வியடைந்த திமுக வேட்பாளர் எம். அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தொடர்ந்தார். 2016ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்கு சில மாதங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தபால் ஓட்டுகள் எண்ணிக்கை மற்றும் சில சுற்று ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அப்பாவு தரப்பு முக்கியமாக இரு பிரச்சினைகளை எடுத்துக்காட்டியது. 

தொடர்ந்து 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த தேர்தல் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி தீர்ப்பை வழங்கினார். 2016 சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இன்பத்துரை பெற்ற வெற்றி செல்லாது என்றும் அப்பாவு வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: What Bro... Very Wrong Bro!”... மாரிதாஸ் கைது..! பொளந்துக்கட்டிய அதிமுக..!!

இந்த நிலையில், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அப்பாவு வெற்றி என்ற ஹைகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரை மேல்முறையீடு செய்துள்ளார். உச்சநீதிமன்றம் வழக்கின் வரம்புகளை மட்டுமே ஆய்வு செய்ய சொன்ன நிலையில், அதை மீறி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அதிமுகவின் இன்ப துரை மேல்முறையீடு செய்திருக்கிறார். 

இதையும் படிங்க: “அதிமுகவை பாஜகவுடன் இணைக்கவும் தயங்கமாட்டார்...” - எடப்பாடி பழனிசாமியை விளாசிய சிடிஆர் நிர்மல் குமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share