இன்ஸ்டா ரீல்ஸில் ரவுடியிசம் காட்டும் இளைஞர்கள்! நிஜ வாழ்க்கையில் தொடரும் பழிக்குப்பழி கொலைகள்?
இதுபோன்ற முன்விரோதங்கள் பழிக்குப்பழி கொலைகளில் முடிவதால், இத்தகைய சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை: சமூக வலைதளங்களில் தங்களை ரவுடிகளாகக் காட்டிக்கொள்ளும் வகையில் ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிடுவது, எதிர்தரப்பினருக்கு மிரட்டல் விடுப்பது போன்ற செயல்கள் இளைஞர்களிடையே மோதல்களை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற முன்விரோதங்கள் பழிக்குப்பழி கொலைகளில் முடிவதால், இத்தகைய சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில இளைஞர்கள் தங்களை ‘டாண்’ எனக் காட்டிக்கொள்ளும் வகையில் ரீல்ஸ் வெளியிடுகின்றனர். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தோன்றுவது, எதிர்தரப்பினரை மறைமுகமாகவோ நேரடியாகவோ எச்சரிப்பது போன்ற வீடியோக்களும் வெளியிடப்படுவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பதிவுகள் இருதரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே உள்ள பகையை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி விழா.. அக்.31 வரை சிவகங்கையில் 12 நாட்களுக்கு 163 தடை உத்தரவு அமல்!
சிவகங்கை மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானதாகக் கூறப்படும் ‘சுள்ளான்’ மதன் (26), முன்விரோதம் காரணமாகப் பழிக்குப்பழியாகக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மதனின் ஆதரவாளர்கள் சிலர் அவருக்காகப் பழிவாங்குவோம் என இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மீண்டும் மோதல் ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதேபோல், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சமூக வலைதளத்தில் ‘யார் டாண்?’ என்ற வகையில் வீடியோ வெளியிடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் சூர்யா (24) கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையிலும் கடந்த 2021-ம் ஆண்டு, அரிவாளுடன் வீடியோ வெளியிட்டது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் அசோக்குமார் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டில்,
சமூக வலைதளக் கணக்குகள் கண்காணிப்பு
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிடுவது, ரவுடியிசத்தைப் பெருமையாகச் சித்தரிப்பது, மற்றவர்களுக்கு மிரட்டல் விடுப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். இதுவரை 20-க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
மேலும், போலிப் பெயர்களிலும் மாற்றுக் கணக்குகளிலும் செயல்படுவோரைக் கண்டறியத் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் கிடைக்கும் கவனத்துக்காக வெளியிடப்படும் மிரட்டல் வீடியோக்கள், நிஜ வாழ்க்கையில் மோதல்களாக மாறி உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகக் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: 44.7 கி.மீ. நீளத்துக்கு இரும்புத் தடுப்பு.. விஜய் வருகைக்காக கோடிகள் செலவா? கிளம்பிய விமர்சனம்..!!