திமுக கூட்டத்தில் சரக்கு பார்ட்டி... குவியும் விமர்சனம்... முட்டுக்கொடுக்கும் காமாட்சி நாயுடு!!
திமுக கூட்டத்தில் மது பரிமாறப்பட்டது குறித்து அக்கட்சியின் ஆதரவாளர் கமாட்சி நாயுடு அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கடந்த 27 ஆம் தேதி ரிஷியவந்தியத்தில் திமுக இளைஞரணிக் கூட்டம் நடைபெற்றது. திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஐயனார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூமாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ரிஷிவந்தியம் எம்எல்ஏ-வும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன், ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பெருநற்கிள்ளி ஆகியோர் கலந்துகொண்டு இளைஞரணியினர் வாக்குச் சாவடிகளில் செயல்பட வேண்டிய விதம் குறித்தும், சமூகவலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை அறிந்து அதற்கு பதிலளிப்பது குறித்தும் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு மதிய உணவு ஏற்பட்டிருந்தது. அதன்படி கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. பிரியாணிக்காக இலையைப் போட்டவர்கள், தண்ணீர் பாட்டில் வைக்கும் முன்பாகவே இலையின் ஓரத்தில் பீர் பாட்டில்களை இலைக்கு ஒன்றாக வரிசையாக வைத்தனர். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை சிலர் செல்ஃபி எடுத்தும் வாட்ஸ் அப்பிலும் சோஷியல் மீடியாவிலும் வைரலாக்கினர்.
இதையும் படிங்க: 200 தொகுதிகளில் திமுக கூட்டணியால் வெற்றி பெற முடியுமா.? பழைய ரெக்கார்டுகள் என்ன சொல்கின்றன.?
திமுக நிகழ்ச்சியில் இளைஞரணியினருக்கு இப்படி பீர் பாட்டிலுடன் பிரியாணி விருந்து வைத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, ‘போதைக்கு எதிராகவும் மது ஒழிப்பை ஆதரித்தும் திமுக தலைமை பேசி வரும் நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகளே இப்படி மது கலாசாரத்தை ஊக்குவிக்கலாமா? என பலரும் சமூகவலைதளங்களில் விமர்சிக்க வருகின்றனர்.
இந்த நிலையில் வெயிலுக்கு பீர் கொடுத்தால் தவறா என திமுக ஆதரவாளர் காமாட்சி நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், அரசு டாஸ்மாக்கில் மதுவை விற்பனை செய்யலாம், ஆனால் அதனை கொடுக்கக் கூடாதா? என்றரர். அவரிடம் மு.க.ஸ்டாலின் மதுவை மறக்க சொன்னது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஐயா சொல்வது நன்மைக்கு தான், ஆனால் அதை கடைப்பிடிக்க எங்களுக்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் என்றார்.
இதையும் படிங்க: திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.!