×
 

உள்ளாட்சித் தேர்தலுக்கு தவெக போடும் ஸ்கெட்ச்... விடாப்பிடியாக அடித்த கம்யூனிஸ்ட்கள்...!

இரண்டாவது கட்டமாக வரும் 9-ஆம் தேதி மீண்டும் தவெக, தனது ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் கட்சிகளின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.

தவெகவுக்கு ஆதரவளித்து வரும் தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். 

தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் சென்னை அருகே கோவளத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய இரு இடதுசாரி கட்சிகளும்  பங்கேற்கவில்லை.

“தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்; ஆனால் கூட்டணியிலும் இல்லை, அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை. எனவே கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை” என தெளிவுபடுத்தினர். கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே இரு கட்சிகளின் நிர்வாகிகளும் முதல்வர் விஜய்யை சந்தித்து தங்களது நிலைப்பாட்டை விளக்கியிருந்தனர்.

இதையும் படிங்க: தோழமை கட்சிகள் கூட்டம்..! “காங்கிரஸுக்கு TVK அதிகாரப்பூர்வ அழைப்பு"..! சத்தியமூர்த்தி பவனில் அமைச்சர்கள்..!!

முதல் முறையாக நடந்த தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ்  சார்பில் ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும், மதிமுக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, எம்.பி. துரை வைகோவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோரும் பங்கேற்றனர். 

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக வரும் 9-ஆம் தேதி மீண்டும் தவெக, தனது ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் கட்சிகளின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.

இதையொட்டி, தவெக அமைச்சர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகத்தை சந்தித்துப் பேசினர்.

பின்னர், அமைச்சர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், தவெக தோழமை கட்சிகளின் சந்திப்பில் பங்கேற்குமாறு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்தார். கடந்த முறை கூட்டத்தில் பங்கேற்காததற்கு காரணம் இருந்ததாகவும், இம்முறை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

அப்போது அவர் கூறியதாவது: “இப்போது அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு கருத்து எங்களிடம் முன்மொழியப்பட்டிருக்கிறது. ஆனால், அது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். இப்போதும் நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். அமைச்சரவையில் இடம் பெறுவதில்லை, கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்பதுதான் எங்களது நிலை.

ஆனால், மாநிலத்தை ஆளுகின்ற ஒரு கட்சி எங்களிடம் சில அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, அதற்கு மதிப்பளித்து அந்தக் கருத்துகளை கட்சியின் முன்னால் நாங்கள் தெரிவிப்போம்” என்றார்.

இதனிடையே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் ஜோசப் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தவெக பேசியதற்கு எதிராக, காங்கிரஸ் மற்றும் மதிமுக ராகுலை முன்னிறுத்தி வரும் நிலையில், நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு தவெக அரசு இந்த தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத கம்யூனிஸ்ட் கட்சிகளை இந்த முறை கட்டாயம் பங்கேற்க வைக்க வேண்டும் என சி.எம்.விஜய் அமைச்சர்கள் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் கம்யூனிஸ்ட் கட்சிகளை சந்தித்த போது கூட, குஜிலியம்பாறை சுற்றறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் குழு கம்யூனிஸ்ட்களிம் நேரடியாக வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: சட்டமன்றத்தில் வார்த்தையை விட்ட புஸ்ஸி ஆனந்த்... தூத்துக்குடி தவெக முன்னாள் பெண் நிர்வாகி பாலியல் வழக்கில் திடுக் திருப்பம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share