×
 
☰

விஜய் போட்டியிட்ட இடத்தில் நானா?... திருச்சி கிழக்கில் களமிறங்குவது குறித்து திருமா. கொடுத்த விளக்கம்...!

விஜய் போட்டியிட்ட தொகுதி என்பதால் வாக்காளர்களை கவர திருமாவளவன் களமிறக்கப்படலாம் எனக்கூறப்பட்டது.

2026 சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இதற்கான முக்கியக் காரணங்களாக, தனது முடிவைச் சுற்றி உருவான அரசியல் ஊகங்கள், திமுக தலைமையிலான கூட்டணியின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம், நாடாளுமன்றத்தில் தொடர வேண்டும் என மூத்த தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் ஆகியவற்றை அவர் விளக்கியிருந்தார். 

தற்போது திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்த திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இக்கட்சியின் தலைவர் விஜய் நின்ற 2 தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதியில் யார் நிற்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விஜய் போட்டியிட்ட தொகுதி என்பதால் வாக்காளர்களை கவர திருமாவளவன் களமிறக்கப்படலாம் எனக்கூறப்பட்டது.

இதுகுறித்து, திருச்சி விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்த போது விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன் என கூறுவது வதந்தி. ஏற்கனவே இடைத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்பதை  தெரிவித்து விட்டேன். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்.

இதையும் படிங்க: இந்தியா கூட்டணியில் வெடித்த அதிருப்தி? போராட்டத்தை நிறுத்திய காங்கிரஸ் தலைமை! மீண்டும் விரிசல்?!

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் த.வெ.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலைவாசி உயர்வில் அரசின் மீது குற்றம் சுமத்துவது உள்நோக்கம் கொண்டது. அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பு ஆளும் அரசுக்கு தான் உள்ளது.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக ஏற்கனவே என்ன நிலைப்பாட்டில் இருந்ததோ, அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார்கள் என நம்புகிறேன்.

இசையமைப்பாளர் தேவா மரணம் தாங்க முடியாத துயரம். அவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார். 

இதையும் படிங்க: இடைத்தேர்தல் முடிவுகள்.. விசிகவை தாழ்த்திக் காட்ட முயற்சி..!! பகீர் திருமாவளவன் குற்றச்சாட்டு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share