தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையாவிற்கு பேரிடி.. ஒரே போடாய் போட்ட ஹைகோர்ட்...!
இசக்கி சுப்பையாவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இசக்கி சுப்பையாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அந்தத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் காந்திமதிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனிடையே, தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி இசக்கி சுப்பையா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் வழக்கை நிராகரிக்க முடியாது எனக் கூறி இசக்கி சுப்பையாவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், இந்த தேர்தல் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சில பகுதிகள் மற்றும் பத்திகளை நீக்க வேண்டும் என இசக்கி சுப்பையா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, குறிப்பிட்ட சில பகுதிகளை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “எனக்கு விஜய் பிடிக்கும் அதான்...” - தவெக மா.செ.வுடன் ஊர் சுற்றிய மாற்றான் மனைவி... தீபா சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட போலீஸ்...!
முன்னதாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் துரையைவிட 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக பதிவாகியுள்ளது.
இதையடுத்து இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற நிலையில், பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார்.
இந்த நிலையில், இசக்கி சுப்பையாவின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளர் காந்திமதிநாதன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பதிலளிக்குமாறு இசக்கி சுப்பையாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இசக்கி சுப்பையா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி டி.பி. பாலாஜி விசாரித்தார். காந்திமதிநாதன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, இசக்கி சுப்பையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரத்தில், தேர்தல் வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த சில குற்றச்சாட்டுகள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளை நீக்க வேண்டும் என்ற இசக்கி சுப்பையா தரப்பின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அந்தப் பகுதிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் காரணமாக, அம்பாசமுத்திரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் தொடர்பான நிலுவையில் உள்ள சட்ட நடவடிக்கைகளில் இந்த தேர்தல் வழக்கும் தொடர்ந்து விசாரணைக்கு உட்பட்டிருக்கும். தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இதனால், இசக்கி சுப்பையாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது, அம்பாசமுத்திரம் தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது.
இதையும் படிங்க: அ.தி.மு.க.வை விட்டு ஏன் வெளியேறினேன்? தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு பேட்டி!