×
 

மெகா கூட்டணி கனவுக்கு பின்னடைவு!! விரக்தியில் எடப்பாடி பழனிசாமி! அதிமுகவினர் அதிருப்தி!

வரும் ஜனவரிக்குள் மெகா கூட்டணி இறுதி செய்யப்படும் என, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, மாவட்டச் செயலர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, “வரும் ஜனவரி மாதத்துக்குள் வலுவான மெகா கூட்டணி முழுமையாக இறுதி செய்யப்பட்டுவிடும்” என்று உறுதியாகத் தெரிவித்தார். இது கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக செங்கோட்டையன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்கள் தவெக மற்றும் திமுக பக்கம் தாவுவதாக வந்த செய்திகளால் கட்சித் தொண்டர்கள் சற்றே கலக்கமடைந்திருந்த நிலையில், எடப்பாடியின் இந்த நம்பிக்கை ஊட்டும் பேச்சு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. “மெகா கூட்டணி வந்துவிட்டால் திமுகவை எளிதாக வீழ்த்தலாம்” என்ற நம்பிக்கை கட்சி நிர்வாகிகளிடம் பரவத் தொடங்கியுள்ளது.

கூட்டத்தில் எடப்பாடி மிகுந்த கோபத்துடனும் அதிருப்தியுடனும் பேசிய மற்றொரு முக்கிய விஷயம், தற்போது நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) தொடர்பானது. “திமுகவினர் இந்தப் பணியை கடுமையாக எதிர்த்தாலும், வீடு வீடாகச் சென்று படிவங்களை விநியோகித்து, பூர்த்தி செய்ய உதவி செய்து, திரும்பப் பெற்று வருகிறார்கள். ஆனால் நமது நிர்வாகிகள் இ oப்பணியில் போதிய ஆர்வம் காட்டவில்லை. இப்படி கோட்டை விட்டால் 2026 தேர்தலில் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்” என்று கடுமையாக எச்சரித்தார்.

இதையும் படிங்க: தவெக ’காட்பாதர்’ ஆக மாறும் செங்கோட்டையன் - விஜய் கொடுக்கப்போகும் முக்கிய பதவி? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...!

ஒவ்வொரு மாவட்டச் செயலரும் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளையும் ஆய்வு செய்து, யாருக்கும் படிவம் கிடைக்காமல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். “திமுகவினர் தில்லுமுல்லு செய்வதைத் தடுத்து நிறுத்தி, நமது ஆதரவாளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், 2026 தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு அறிவுறுத்தினார். ஒவ்வொரு தொகுதிக்கும் வெற்றி வாய்ப்புள்ள, தகுதியான வேட்பாளர்களின் பெயர்களை உடனடியாக பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உள்ளூர் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்த வேண்டும், அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

எடப்பாடியின் இந்த உறுதியான பேச்சு, கட்சியின் உள் பிளவு பேச்சுகள் மத்தியில் தொண்டர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. ஜனவரி மாதத்துக்குள் மெகா கூட்டணி உருவானால், தமிழக அரசியலில் புதிய சூறாவளி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இப்போதே தேர்தல் மோடுக்கு மாறியிருக்கும் அ.தி.மு.க. முகாம், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கத் தயாராகிவிட்டது என்றே தெரிகிறது.
 

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு விரோதி ஸ்டாலின்… இப்படிப்பட்ட முதல்வரை பார்த்ததே இல்ல… விளாசிய இபிஎஸ்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share