×
 

எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறேன் என்று சபாநாயகர் பிரபாகர் கூறினார்.

தமிழ்நாடு அரசியலில் மீண்டும் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகிய மூன்று எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்து இருந்தார். இந்த நிகழ்வு அதிமுகவுக்கு கணிசமான பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழக வெற்றிக் கழகம் தரப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 

மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த கே. மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த எஸ். ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த பி. சத்தியபாமா ஆகிய மூன்று எம்எல்ஏக்களும் அதிமுகவின் கிளர்ச்சி அணியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினருடன் இருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த மூவரும் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். சபாநாயகர் உடனடியாக அந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டார். இன்று MLA இசக்கி சுப்பையா ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் சட்டப்பேரவை கூட்டம்..! உறுப்பினர்கள் வாழ்த்துரை..!

இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேரின் ராஜினாமா நேற்று ஏற்கப்பட்டு 3 தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் கொடுத்துள்ளார். சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறேன் என்றும் மற்றவர்கள் வெளியில் எது வேண்டுமானாலும் பேசட்டும் எனவும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார். கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிமுக கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க கால அவகாசம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மிக நேர்மையாக வெளிப்படையாக அரசு செயல்பட வேண்டும் என முதல்வர் விரும்புகிறார் என்றும் அப்படித்தான் செயல்படுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: எஞ்சிய எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைப்பது எப்படி?! ஆதரவு நிர்வாகிகளுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share