அடேங்கப்பா... ஓராண்டில் பாஜகவுக்கு இவ்வளவு கோடி வருமானமா? - வெளியானது ஷாக்கிங் ரிப்போர்ட்...!
இந்தியாவில் தேசிய கட்சிகளுக்கு கடந்த நிதியாண்டில் கிடைத்த வருமானத்தில் பாஜகவுக்கு மட்டும் சுமார் 6770 கோடி ரூபாய் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணயத்தில் தேசிய கட்சிகள் தாக்கல் செய்த வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்த ஏடிஆர் என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், என்பிஇபி ஆகிய ஆறு கட்சிகளின் கடந்த ஓராண்டு மொத்த வருமானம் 7,960 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையில் பாஜகவின் வருமானம் 6769.14 கோடி ரூபாய் ஆகும். இது ஒட்டுமொத்த தேசிய கட்சிகளுக்கு கிடைத்த வருமானத்தில் 85% என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த 6,769 கோடி ரூபாய் வருமானத்தில் நன்கொடையாக மட்டுமே 6,125 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 2023 - 24ல் பாஜாகாவுக்கு கிடைத்த வருமானத்தை விட கடந்த நிதியாண்டில் கிடைத்த வருமானத்தின் அளவு 56% அதிகமாகும். கடந்த நிதியாண்டில் 918 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 25% கூடுதல் வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக தனது வருமானத்தில் 3774.58 58 கோடி ரூபாயை அதாவது 57 சதவீதத்தை ஓராண்டில் செலவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது வருமானத்திற்கும் அதிகமாக மொத்தம் 1,112 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. சிபிஐ(எம்) 172.60 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், அதே நேரத்தில் 173.86 கோடி ரூபாயை செலவு செய்ததாகவும் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 58.58 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், ஆண்டுக்கான செலவு 106.30 கோடி ரூபாய் என்றும் அறிவித்துள்ளது. கட்சியின் செலவு அதன் வருமானத்தை விட சுமார் 47.71 கோடி, அதாவது 81.45 சதவீதம் அதிகமாகும். ஆம் ஆத்மி கட்சி 39.28 கோடி வருமானம் ஈட்டியதாகவும், அதே நேரத்தில் 36.46 கோடி செலவு செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஓபிஎஸுக்கு துணை முதல்வர் பதவி... பாஜகவின் திடீர் கரிசனம்... பதில் சொல்வாரா ஸ்டாலின்...!
2023-24 மற்றும் 2024-25 க்கு இடையில், பாஜகவின் வருவாய் 2,428.67 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸ் வருமானம் 306.83 கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வருமானம் 16.60 கோடி அளவிற்கு அதிகரித்து 73.20 சதவீத உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சிபிஐ(எம்) தனது வருமானத்தில் 4.96 கோடி உயர்வுடன் 2.96 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் வருமானத்தில் 6.19 கோடி ரூபாய் குறைந்து 9.56 சதவீதமாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு பத்து போதுமா? தமிழ்நாட்டை கொலை கூடாரமாக்கிய டாஸ்மாக் மாடல் அரசு... வானதி சீனிவாசன் தாக்கு..!!