“தமிழகத்தில் இனி ஒரே கழகம் தான்...” - எம்.ஜி.ஆருக்கு நிகராக விஜயை ‘ஆஹோ ஓஹோ’ என புகழ்ந்து தள்ளிய கடம்பூர் ராஜூ...!
அதிமுக நிலைமையைப் பற்றி யோசித்தால் வேதனைக்குரிய விஷயம் தான் என கடம்பூர் ராஜூ கருத்து
தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், த. வெ. க துணைப் பொதுச் செயலாளருமான கடம்பூர் ராஜூ தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சி தொடங்கி பிறகு சந்தித்த முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த வரலாறு முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பிறகு, இன்றைக்கு தூய ஆட்சி நடத்தி வரும், லஞ்ச லாவண்யம், பண நாயகத்தை தேர்தல் களத்தில் வீழ்த்தி, ஜனநாயகத்தை காத்த ஜனநாயகன் முதல்வர் ஜோசப் விஜய் ஒரு அற்புதத்தை நடத்திக் காட்டினார்.108 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்து முதல்வர் ஜோசப் விஜய் தான் ஆட்சிக்கட்டில் அமர வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்தனர்
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்வில் இரண்டு திராவிட இயக்கங்களை வீழ்ச்சி மூன்றாவது சக்தியாக, புதிய சக்தியாக முதல்வர் ஜோசப் விஜய் உருவெடுத்தது மிகப்பெரிய வரலாறு. ஆட்சி அமைத்து மூன்று,நான்கு மாதங்களுக்கு உள்ளாகவே இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தல் முடிவுகளை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: என்ன ஆச்சு?... திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்...!
இடைத்தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை முதல்வர் ஜோசப் விஜய் பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் இனி ஒரே கழகம் தான் அது தமிழக வெற்றிக் கழகம் தான் மக்களின் ஆதரவு பெற்ற ஏகோபித்த சக்தி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழாக பார்க்க வேண்டும்.
கடந்த பொதுத் தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக தான் வெற்றி பெற்றிருந்தது. அப்படி வெற்றி பெறாத தொகுதியில் கூட இன்றைக்கு த. வெ. க வெற்றி பெற்றுள்ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றது போல இந்த இடைத் தேர்தலில் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
திமுக அதிமுக அரசியல் பேசாமல் முதல்வர் விஜய் பற்றி விமர்சனம் மட்டும் செய்தார்கள். அந்த விமர்சனங்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள் . நிர்வாக திறமை, தூய ஆட்சி, லஞ்ச லாவண்யம் இல்லாத தூய சக்தியாக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒரு நற்சான்றிதழ்
அதிமுக நிலைமையைப் பற்றி யோசித்தால் வேதனைக்குரிய விஷயம் தான். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தலைமையில் அதிமுக இருந்தபோது தோல்வியை காணாத இயக்கமாக இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவை இந்திய துணைக்கண்டத்தில் மூன்றாவது கட்சியாக உயர்த்தினார்.
2021ல் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தது.2026ல் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக தீய சக்தி என்ற அடையாளத்துடன் துவங்கப்பட்ட கட்சி அதிமுக. அந்தக் கட்சி இன்று மழுங்கி மங்கி விட்டது.
திமுக எதிர்ப்பில் துவங்கப்பட்ட அதிமுகவை முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் அந்த வழியில் வழி நடத்தினர். இன்றைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக அதிமுகவை பற்றி பேசவில்லை, அதிமுக திமுகவை பற்றி பேசவில்லை
திமுக தீய சக்தி என்ற உணர்வுடன் ரத்தத்திலே உற்றி வளர்த்த தலைவர்களுக்கு துரோகம் நடைபெற்ற காரணத்தினால் தான் அதிமுக ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் என்னை போன்ற அதிமுக நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறி, திமுக தீய சக்தி என்ற அடையாளம் காட்டி தேர்தலை சந்தித்து சாய்த்துக் காட்டிய முதல்வர் விஜயை நோக்கி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகின்றனர்
திருமங்கலம் ஃபார்முலா என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியது திமுக. அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் நடைபெற்ற தேர்தல்களில் அரசியல் கட்சியினர் மக்களை எப்படி சந்தித்தனர் என்பது தெரியும்.
ஆனால் தமிழக வெற்றிக்கழகம் பணம் கொடுத்து வாக்குகளை திருடாமல், வாங்காமல் நேர்மையாக தேர்தலை சந்தித்தனர். இது ஒன்றே தூய சக்தி என்பதற்கு ஒரு அடையாளம் இடைத்தேர்தல் என்றால் மக்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம் இடைத்தேர்தல் வந்துவிட்டால் தீபாவளி, பொங்கல் என்று மக்கள் எதிர்கொள்வார்கள்.
ஆனால் இந்த இடைத்தேர்தலில் ஒருபைசா கூட கொடுக்காமல் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்தித்தது. த. வெ. க. தான் தூய சக்தி என்பதற்கு நடைபெற்ற தேர்தலே சாட்சி. பொருளாதார வீக்கத்தின் அடிப்படையில் சில நேரங்களில் விலைவாசி உயரும். பொருளாதார நிலை சரியாகும் போது விலைவாசி குறையும். விலைவாசியை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். நிச்சயமாக விலைவாசி உயர்வு விரைவில் கட்டுப்படுத்தப்படும்
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக போராட சென்று விட்டு பெண்ணைப் பற்றி அவதூறாக பேசியதால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தாராபுரத்தில் வேட்பாளர் பெயரை கூறி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பெண் என்று பாராமல் திமுகவினர் அவமானப்படுத்தி தாக்கினர்.
திமுகவிற்கு இது( பெண்களை இழிவு படுத்துவது) ஊறிப்போன ஒன்று என்றைக்கும் மாற மாட்டார்கள். அவர்கள் மாற வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்தாலும் மாற மாட்டார்கள் பெண்களை இழிவுபடுத்து என்பது திமுக ரத்தத்தில் உறியது. அவர்களுக்கு இயல்பான ஒன்று என்றார்
இதையும் படிங்க: ஹை அலர்ட்டில் டெல்லி... தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த கரப்பான் பூச்சிகள்... இன்று காத்திருக்கும் அதிரடி சம்பவம்...!