மாத்தியாச்சு..! "கனிமொழி ராஜாத்தி கருணாநிதி"..! தாய் பெயரை சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது தாயாரின் பெயரையும் தனது பெயரோடு இணைத்து மாற்றம் செய்து கொண்டார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, தனது பெயரில் முக்கியமான மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக செய்துள்ளார். இதுவரை கனிமொழி கருணாநிதி என்ற பெயரில் அறியப்பட்டு வந்த அவர், இப்போது தனது தாயாரின் பெயரையும் சேர்த்து கனிமொழி ராஜாத்தி கருணாநிதி என்று அழைக்கப்படுகிறார். இந்த மாற்றம் அரசு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் மூலம் உத்தியோகபூர்வமானது.
கனிமொழி 1968 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. தாயார் ராஜாத்தி அம்மாள். கருணாநிதியின் மூன்றாவது மனைவியான ராஜாத்தி அம்மாளுக்குப் பிறந்த ஒரே மகள் இவர்தான். குழந்தைப் பருவம் முதலே அரசியல் சூழலில் வளர்ந்த கனிமொழி, கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் எனப் பல துறைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர்.
திமுகவில் மகளிர் அணிச் செயலாளராகவும், பின்னர் துணைப் பொதுச்செயலாளராகவும் பொறுப்புகளை ஏற்றுள்ளார். தற்போது தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.நீண்ட காலமாக அவரது பெயர் கனிமொழி கருணாநிதி என்றே பயன்படுத்தப்பட்டு வந்தது. தந்தையின் பெயரைச் சேர்த்து அழைக்கப்படுவது தமிழக அரசியல் குடும்பங்களில் பொதுவான நடைமுறை. ஆனால் கனிமொழி தனது தாயாரின் பெயரையும் முழுமையாக அங்கீகரிக்க விரும்பியதாகத் தெரிகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நேர்காணலில், தேவைப்பட்டால் தன்னை கனிமொழி ராஜாத்தி கருணாநிதி என்று அழைக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?
அந்த விருப்பம் இப்போது அதிகாரப்பூர்வ வடிவம் பெற்றுள்ளது.பெயர் மாற்றம் என்பது வெறும் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல. இது தாயின் அடையாளத்தையும் சமமாக முன்னிறுத்தும் ஒரு செயலாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பெண்களின் பெயர்களில் தந்தையின் பெயர் அல்லது கணவரின் பெயர் சேர்க்கப்படுவது வழக்கம். ஆனால் தாயின் பெயரையும் சேர்த்து அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்வது அரிதானது. கனிமொழி இந்த மாற்றத்தின் மூலம் தனது தாயாருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார் என்று பலர் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: யாகாவா ராயினும் நாகாக்க! ஆ.ராசா சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கனிமொழி பதிவால் கிளம்பிய புதிய விவாதம்!