×
 

"முதல்ல இதை நிறுத்துங்க..." - கோவை மாணவி குறித்த கேள்விகளுக்கு கனிமொழி ஆவேசம்...!

இந்த விஷயத்தில் சமூகம் அந்த பெண் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சியாக தான் இன்று எஸ்ஐஆர்-யை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொண்டு பல வாக்காளர்களை பல பிரச்சினைகளை வாக்காளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கிக் கொண்டிருப்பதாக கனிமொழி எம்.பி குற்றச்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உங்களுக்கு எதிரான குற்றங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாது பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாம் கண்டிக்க வேண்டும். இந்த விஷயத்தில் சமூகம் அந்த பெண் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும் முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் விரைவிலே ஒரு அழுத்தமான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் முழு முயற்சியோடு ஈடுபட வேண்டுமென தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டனம் தெரிவிக்கலாம் நடவடிக்கை எடுத்ததற்கு எதற்கு கண்டனம் என கேள்வி எழுப்பினார்.

யாருடைய பதவியையும் பறிக்கவில்லை கட்சி தலைவர் என்ற முறையில் அறிவுரை கூறியுள்ளார் வெற்றி பெற வேண்டும் அதற்காக எல்லோரும் முனைப்புடன் பாடுபட வேண்டும் என அவர் எல்லோருக்கும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ராசாத்தி அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு..!! பதறியடித்துக்கொண்டு ஓடிய மகள் கனிமொழி..!!

எஸ்ஐஆர் -யை தேர்தலுக்கு முன்பாக அவசர அவசரமாக கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாது இது உண்மையாக நேர்மையாக நடக்க வேண்டும் என்று இருந்தால் போதிய அவகாசம் கொடுத்து எஸ்ஐஆர் .-யை அவர்கள் சரியாக செய்ய முடியும். ஆனால் பீகாரில் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம் எத்தனை பேருடைய வாக்குரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிராவாக இருக்கட்டும், ஹரியானாவாக இருக்கட்டும் சமீபத்தில் கூட ராகுல் காந்தி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலே மக்களுடைய வாக்குரிமை எவ்வாறு பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்.

 நம்முடைய முதல்வர் பீகார் சென்று தன்னுடைய முழு ஆதரவையும் அளித்திருக்கிறார். ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சியாக தான் இன்று எஸ்ஐஆர் -யை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொண்டு பல வாக்காளர்களை பல பிரச்சினைகளை வாக்காளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து தான் திராவிட முன்னேற்றக் கழகமும் நம்முடைய கூட்டணி கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.

சமீபத்தில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் கணக்கெடுத்து கொண்டு அதற்கு நெறிப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டு எல்லாருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படுகிறது என்றார்.

இதையும் படிங்க: வெட்கக்கேடான சமரசம்... பெண் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு எம்.பி கனிமொழி கண்டனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share