×
 
☰

பஞ்ச் டயலாக் பேசுறதுக்கு மட்டும் தான் வாயை திறக்கிறார் முதல்வர் விஜய்! திமுக எம்.பி கனிமொழி காட்டம்!

காவல்துறை ஆளுங்கட்சியின் ஐடி விங் போன்று செயல்படுவதாகவும், குற்றங்களை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை என்றும், குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் மஞ்சள் நீர்காயல் கிராமத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு விஷயங்களில் கருத்து தெரிவித்தார்.

திருச்செந்தூருக்கு தற்போது 1.1 எம்எல்டி தண்ணீர்தான் வந்து கொண்டிருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பால் நாள்தோறும் 3.8 எம்எல்டி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் குறைந்த அளவிலேயே வழங்கப்படுகிறது. இதனை அதிகரிக்க மஞ்சள் நீர்காயலில் இருந்து தண்ணீர் கொண்டு வர கடந்த ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டு 30.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆத்தூர் வரை ஏற்பாடுகள் நடந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆனால் போதிய பெரிய பைப்லைன் இல்லாததால் உடைப்புகளும் கசிவுகளும் ஏற்படுகின்றன. 15 கிலோமீட்டர் தூரத்திற்கு பைப்லைன் சரிசெய்தல் மற்றும் எஸ்எஸ் டேங்க் சீரமைப்புக்கு புதிதாக 30 கோடிக்கு ப்ரொபோசல் அளிக்கப்பட்டுள்ளது. அரசு இதனை ஏற்று நிதி ஒதுக்கினால் தான் போதிய தண்ணீர் கிடைக்கும் என அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஆளுங்கட்சியின் ஐ.டி விங் போல செயல்படும் காவல்துறை!! எதுவுமே கட்டுப்பாட்டில் இல்லை! கனிமொழி காட்டம்!

மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்களுக்கு 4 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, ஒன்றிய அரசிடம் எடுத்துக்கூறப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்களிடம் பேசியுள்ளதாகவும், மீனவர்களை விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அபராதத்தை குறைக்க முயற்சி நடப்பதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை ஆளுங்கட்சியின் ஐடி விங் போன்று செயல்படுவதாகவும், குற்றங்களை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை என்றும், குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆட்சிக்கு வந்த பிறகு 50-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதாகவும், தவெக நிர்வாகிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினரை கைது செய்வதில் காட்டும் ஆர்வம் குற்றவாளிகளை கைது செய்வதில் இல்லை என்றும் கூறினார்.

முதல்வர் பஞ்ச் டயலாக் பேசுவதற்கு மட்டும் வாயைத் திறக்கிறார். சட்டமன்றத்திலும் மற்ற நேரங்களிலும் எதற்கும் விளக்கம் தராத முதலமைச்சர் என்றும், பத்திரிகையாளர்களை சந்திக்காத முதலமைச்சர் என்றும் அவர் விமர்சித்தார். திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை திமுகவினர் கட்டினார்கள் என்று சொல்லாமல் ரீல்ஸ் போட்டு திறந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: கைதிகள் தப்பியோட்டம்..! என்ன சால்ஜாப்பு சொல்ல போறீங்க.? கனிமொழி எம்பி கண்டனம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share