×
 

ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

இந்தக் கூப்பன் திட்டமும். சமையலறையில் இருந்து சீக்கிரம் விடுதலை கிடைப்பதற்கான திட்டம்தான் என கனிமொழி சொன்னார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவரும், துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் உணர்ச்சிபூர்வமாக பதிலளித்தார்.

கனிமொழி கூறியதாவது: “தலைவர் கலைஞர் ஆட்சியில் கேஸ் அடுப்பு வழங்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். அதை நிறைவேற்றும் போது பல அதிகாரிகள், ‘ஒரு பர்னர் அடுப்பு கொடுத்தாலே போதும், செலவு குறையும்’ என்று முதலமைச்சரிடம் சொன்னார்கள். 

அதற்கு கலைஞர் சொன்ன பதில் மிக அழகானது. ‘நான் தேர்தல் வாக்குறுதியாக இதைச் சொல்லவில்லை. இரண்டு பர்னர் அடுப்பு கொடுத்தால் பெண்கள் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு சமையலறையில் இருந்து வெளியில் வருவார்கள். தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யத் தொடங்குவார்கள்’ என்றார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

அதேபோலத்தான் இந்தக் கூப்பன் திட்டமும். இது சமையலறையில் இருந்து பெண்களுக்கு சீக்கிரம் விடுதலை அளிக்கும் திட்டம். ஒரு வாஷிங் மெஷின் வாங்கினால் கையால் துவைக்கும் நேரம் குறையும். பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை பயன்படுத்தும்போது அவர்களின் நேரம் சேமிக்கப்படும். அந்த நேரத்தில் அவர்கள் வேறு பயனுள்ள வேலைகளை செய்ய முடியும். இது ஒரு முதலீடு” என்று விளக்கினார்.

மேலும் அவர், “கூப்பன் கொடுக்கும்போது ‘இந்தப் பொருட்களைத்தான் வாங்க வேண்டும்’ என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டுத் தேவைக்கு ஏற்றவாறு, தன் வேலை சுமையை குறைக்கும் பொருளைத் தானே தேர்வு செய்யட்டும். வீட்டில் ஏற்கனவே பிரிட்ஜ் இருந்தால் மீண்டும் அதை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே முடிவு செய்யட்டும்” என்று தெரிவித்தார்.

கனிமொழி இந்த உதாரணத்தின் மூலம், கூப்பன் திட்டம் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்கும் ஒரு முக்கியமான திட்டம் என்று வலியுறுத்தினார். இது பெண்களின் நேரத்தை சேமித்து, அவர்களுக்கு அதிக சுதந்திரத்தை அளிக்கும் என்று அவர் விளக்கினார்.

தி.மு.க.வின் இந்தத் திட்டம் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கலைஞரின் பார்வையைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கனிமொழி குறிப்பிட்டார்.

இந்தக் கூப்பன் திட்டம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். இது பெண்களுக்கு பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share