அரசு அதிகாரிகள் வீடுகளில் அதிரடி ரெய்டு! ஒரே நாளில் ரூ. 1.35 கோடி பணம், நகைகள் பறிமுதல்!
கர்நாடகாவில் அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தால் அவர்களது வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி நகை, பணத்தை பறிமுதல் செய்வது அவ்வப்போது நடக்கிறது.
கர்நாடகாவில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்கள் இடங்களில் 48-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
இந்த சோதனையில், 38 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள், நகை, பணம் கைப்பற்றப்பட்டுள்ளன. சொத்து குவிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது. இது சக அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு வரை, லோக் ஆயுக்தா போலீசார் 12 அதிகாரிகளின் இடங்களில் சோதனை நடத்தினர். பெங்களூரு, ஹாசன், சித்ரதுர்கா, உடுப்பி, கலபுரகி, ஹாவேரி, பாகல்கோட் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடந்தது.
இதையும் படிங்க: கரூர் சம்பவம்... உச்சநீதிமன்றத்தை நாடுவோம்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!
சோதனையில், 24.34 கோடி ரூபாய் சொத்துகள் (நிலங்கள், வீடுகள்), 1.20 கோடி ரூபாய் பணம், நகை, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. லோக் ஆயுக்தா ஐ.ஜி. சுப்பிரமணீஸ்வர ராவின் உத்தரவால் நடத்தப்பட்டது. அதிகாரிகள் உறவினர்கள் இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சோதனைக்கு உட்பட்ட அதிகாரிகள்:
- ஹாசன்: சுகாதாரம் & குடும்ப நலத் துறை முதல்நிலை உதவியாளர் ஜோதி மேரி.
- கலபுரகி: விவசாயத் துறை உதவி இயக்குனர் தூலப்பா.
- சித்ரதுர்கா: விவசாயத் துறை உதவி இயக்குனர் சந்திர குமார்.
- உடுப்பி: வட்டார போக்குவரத்து அதிகாரி லட்சுமி நாராயண் நாயக்.
- பெங்களூரு மல்லசந்திரா: மகப்பேறு மருத்துவமனை மருத்துவ அதிகாரி மஞ்சுநாத்.
- கர்நாடகா புறநகர் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம்: உதவி நிர்வாக பொறியாளர் ஜெகதீஷ் நாயக்.
- ஹாவேரி ராணிபென்னூர்: வருவாய் இன்ஸ்பெக்டர் அசோக் (1.35 கோடி ரூபாய் நகை, பணம் கைப்பற்றல்).
- சவனூர் தாலுகா: பஞ்சாயத்து அதிகாரி பசவேஷ்.
- அலமாட்டி பாலதண்டே: கால்வாய் திட்ட ஜூனியர் இன்ஜினியர் சேத்தன்.
- கர்நாடக இடைநிலை கல்வி ஆணையம்: இயக்குனர் சுமங்களா (7.32 கோடி ரூபாய் சொத்து).
- உணவு & பொது விநியோகத் துறை: ஜூனியர் இன்ஜினியர் நடுவினமணி.
- பெங்களூரு மெட்ரோ திட்டம்: நிலம் கையக் கொள்ளும் சர்வேயர் கங்கமாரி கவுடா (4.66 கோடி ரூபாய் சொத்து).
இவர்கள் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தது. சோதனையில் சந்திரசேகர் (5.14 கோடி ரூபாய்) உள்ளிட்டோர் சொத்தில் கணிசமான அளவு கண்டுபிடிக்கப்பட்டது.
12 அதிகாரிகளுக்கும் வழக்கு பதிவு. சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜர்படுத்த உள்ளனர். சொத்துகள் கைப்பற்றி உள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். லோக் ஆயுக்தா "ஊழல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை" எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இது, கர்நாடக அரசு ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கெமிக்கல் ஃபேக்டரியில் பற்றிய தீ! உடல் கருகி இறந்த தொழிலாளர்கள்! வங்கதேசத்தை உலுக்கிய சோகம்!