கர்நாடகாவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1 கோடி பேர் அதிரடியாக நீக்கம்! அரசியல் பரபரப்பு!
இறுதி வாக்காளர் பட்டியலில் 2.25 கோடிக்கும் அதிகமான ஆண்கள், 2.29 கோடி பெண்கள் மற்றும் 2,841 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் சுமார் 4.55 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் எஸ்ஐஆர் நடவடிக்கையால் கிட்டத்தட்ட 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இருமுறை பெயர் இடம்பெற்றவர்கள், வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்களைக் கண்டறிந்து அவர்களின் பெயர்களை எஸ்ஐஆர் நடவடிக்கையின் வழியாக வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கி வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் இதுதொடர்பான பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு பயந்துதான் ராகுல் மவுனமா? தமிழக எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் திமுக புதிய கேள்வி!
இறுதி வாக்காளர் பட்டியலில் 2.25 கோடிக்கும் அதிகமான ஆண்கள், 2.29 கோடி பெண்கள் மற்றும் 2,841 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் சுமார் 4.55 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு முன்பாக 5.54 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 6.83 லட்சம் பேர் உள்ளனர். 85 வயதைக் கடந்த 3.92 லட்சம் வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது இடம்பெயர்ந்தவர்கள், கண்டறிய முடியாதவர்கள், இறந்தவர்கள் மற்றும் போலிப் பதிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதிப் பட்டியல் வெளியான நிலையில், வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளதா என்பதைத் தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!