×
 

“விஜய் அரசியலுக்கு தகுதியற்றவர்” - கரூர் சம்பவம் குறித்து காட்டமாக விமர்சித்த கருணாஸ்...!

பாஜக ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்க் பரிவாரண  கூட்டத்திற்கு எதிராக பாஜகவே வெளியேறு என்று தமிழகத்தில் குரல் கொடுப்போம் என்ற உறுதிமொழியை முக்குலத்தர் கூலிப்படை இன்று ஏற்கிறது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் 224 ஆம் ஆண்டு மருது சகோதரர்களின் குருபூஜைக்கு மரியாதை செலுத்த வந்த முக்குலத்தர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ஒட்டு மொத்தமாக இரண்டாம் உலகப்போரில் இந்தியா போராடி  வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில்  சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய I N.A. போராடிக்கொண்டிருக்கும் போது அதற்கு உறுதுணையாக சுபாஷ் உடன் தோளோடு தோள் நின்று முத்துராமலிங்க தேவரின்  வெற்றியை தடுத்தது இன்றைக்கு இருக்கிற ஆர் எஸ் எஸ்  கூட்டம் தான் இதை யாரும் மறக்க முடியாது.

224 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பியர்களே மருது சகோதரர்கள் வெளியேறச் சொன்னார்கள் இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் சுதந்திர இந்தியாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத பாஜக ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்க் பரிவாரண  கூட்டத்திற்கு எதிராக பாஜகவே வெளியேறு என்று தமிழகத்தில் குரல் கொடுப்போம் என்ற உறுதிமொழியை முக்குலத்தர் கூலிப்படை இன்று ஏற்கிறது.

மாரி செல்வராஜின் பைசன் படத்தை பபற்றி நான் எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை, நான் சினிமாவில் இருக்கின்றேன் சினிமா மூலம் மக்களுக்கு நல்ல விஷயத்தை கூறலாம், அடுத்த தலைமுறைகளுக்கு அது நல்லதை கடத்தும் என்று கூறலாம்.அடுத்த தலைமுறைக்கு தவறான விஷயத்தை கடத்திக்கிட்டு போற மாதிரி இருந்தா அதை தவிர்க்காலம்.

இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வீட்டில் விஜய் செய்த சம்பவம்... வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்...!

சினிமாவுல நடிச்சா முதல்வர் ஆயிடலாம் என்று எண்ணம்  எல்லோருக்கும் வந்துவிட்டது, என்று சீமான் கூறியுள்ளார் அதைப்பற்றி உங்களுடைய கருத்து? என்ற கேள்விக்கு
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஜெயலலிதா எல்லாரும் சினிமாவில் இருந்து தான் அரசியலுக்கு வந்து முதல்வரானாங்க அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் அரசியலில் வர உரிமை உள்ளது, இந்த துறை அல்ல எந்த துறையில் இருந்து வந்தாலும் வரலாம், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கரூரில் 41 அப்பாவிஉயிர்கள் போன சம்பவத்தில் விஜய் ஓடி ஒழிவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் மக்களோடு இருந்து பிரச்சனைகளை  சந்திக்க திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லை- விஜய் அரசியலுக்கு தகுதியற்றவர்.

விஜய் மருத்துவமனை சென்றால் மேலும் உயிர் சேதம் ஏற்படும் என்ற காரணத்தினால் தான் அவர் போகவில்லை என்று கூறுகிறார்கள் அதைப் பற்றிய உங்களுடைய கருத்து?, இதெல்லாம் ஒரு யூகம்தான் படபிடிப்பின் போகும்போது நடக்காத சம்பவங்கள் பொது இடங்களுக்கு போகும் போது வந்ததுனால இது நடந்துச்சு ,இறங்கி போய் இருந்தா இதை விட அதிகமா நடந்திருக்கும், இது எல்லாம் யூகம்தான் சார் ,இதை விட பெரிய கூட்டத்தை எல்லாம் கையாண்டவர் விஜயகாந்த் இதைவிட பெரிய மாநாடு நடத்தியவர் விஜயகாந்த் ,தலைவனா இருந்தா பிரச்சனை வந்தால் களத்தில் இறங்கி நிற்பவன் தான் தலைவன் சினிமால மட்டும் 100 பேர இறங்கி சண்டை போடுறவன் தலைவன் கிடையாது நேரிலையும் இறங்கி சண்டை செய்யனும் அதற்கான தகுதிகளை நாம் வளர்த்துக்கணும் என்றார்.

இதையும் படிங்க: 41 பேர் உயிரிழந்த சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை நாளை சந்திக்கிறார் விஜய்..!! கரூரிலிருந்து கிளம்பிய மக்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share