வேண்டாத வேலை! வாயை விட்டு மாட்டிக்கொண்ட கருணாஸ்! கொந்தளிக்கும் அமைப்புகள்! வலுக்கும் கண்டனம்!
இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் பழக்கம் கொண்ட கருணாஸ் பேச்சுக்கு இணையத்தில் கண்டனம் வலுத்து வருகிறது.
சென்னை, மார்ச் 9: நடிகரும் திமுக முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் சில வாரங்களுக்கு முன் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சு இணையத்தில் மீண்டும் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கருணாஸ், "இந்து என்று ஒரு மதமே கிடையாது" என்று கூறியிருப்பது இந்து மதத்தை இழிவுபடுத்துவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவில் கருணாஸ் பேசியதாவது: "நான் சொல்கிறேன், எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இந்து என்று ஒரு மதமே கிடையாது. பிறகு என்ன இந்து? நான் யார்? நான் சைவ மதத்தை சார்ந்தவன். நான் சிவனையும் முருகனையும் தொன்றுதொட்டு ஆண்டு காலமாக வணங்கி வந்தவன். இந்தியாவில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.
புத்த மதம், சைவம், சமணம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்று பல உள்ளன. வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்தபோது, நிர்வாக வசதிக்காக பல மதங்களை கொண்ட மக்களை 'ஹிந்து' என்ற பொதுப்பெயரில் அழைத்தார்கள். அது மதமல்ல, வெறும் நிர்வாக பெயர் மட்டுமே. நான் சிவனை கும்பிடுகிறேன், நீங்கள் பெருமாளை கும்பிடுகிறீர்கள், நாமெல்லாம் ஹிந்து என்று வைத்துக்கொள்ளலாம், தப்பில்லை. ஆனால் இத்தனை மதங்கள் சேர்ந்ததுதான் ஹிந்து" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் நல்ல செய்தி! ஒரு கெட்ட செய்தி!! எம்.பி தம்பிதுரைக்கு சிக்கல்!! ஆப்பு வைத்த கோர்ட்!!
இந்த பேச்சு இணையத்தில் பரவியதும், இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் பழக்கம் கொண்டவர் என்று கருணாஸ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர் "இந்து மதத்தை மறுப்பது திமுகவின் கொள்கையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பக்தர்கள் இதை கடுமையாக கண்டித்து வருகின்றனர். சிலர் "சைவமோ வைணவமோ என்று பிரித்து பேசுவது இந்து ஒற்றுமையை சிதைப்பது" என்று விமர்சித்துள்ளனர்.
கருணாஸ் இதற்கு முன்பும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பேச்சுகளால் பேசப்பட்டவர். தற்போது இந்த வீடியோ மீண்டும் பரவியதால், சமூக வலைதளங்களில் #Karunas #HinduReligion #Controversy போன்ற ஹேஸ்டேக்குகளுடன் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இது தமிழக அரசியல் மற்றும் மத விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. இந்து மதத்தின் வரலாறு, ஒற்றுமை குறித்து பலர் விளக்கங்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை தொடர்பாக கருணாஸ் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை. ஆனால் இணையத்தில் கண்டனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஈரான் தாக்குதலில் இந்தியர் 3 பேர் பலி!! 20 பேர் காயம்!! எண்ணெய் டேங்கர் கப்பலை சுக்குநூறாக்கிய ட்ரோன்!!