×
 

ஆதவ் அர்ஜுனாவின் கரூர் கணக்கு..! சட்டப் போருக்கு தயாராகும் திமுக..! சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு..!!

கரூர் விவகாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை திமுக முடிவெடுத்துள்ளது.

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா தவெகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் பேசினார். அப்போது, கரூர் சம்பவத்தை மையப்படுத்தி திமுக அரசு மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில், “கரூர் விவகாரத்தில் தவெகவிற்கு ஒரு தனிப்பட்ட கணக்கு வழக்கு உள்ளது. அந்தக் கணக்கை முழுமையாகத் தீர்க்காமல் தவெக ஒருபோதும் விடாது” என்று வலியுறுத்தினார். கரூர் சம்பவத்தில் காவல்துறையை ஏவிவிட்டு திட்டமிட்டு தவெக மக்களை கொன்று குவித்ததாகவும், இது திமுகவின் சதி என்றும் அவர் குற்றம் சாட்டினார். “கரூரில் காவல்துறையினரை வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்தார்கள்” என அவர் கூறிய வார்த்தைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 

மேலும், கரூர் கூட்ட நெரிசல் தற்செயலானது அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், திமுக அரசு காவல்துறையை தவறாகப் பயன்படுத்தி வேண்டுமென்றே இத்தகைய சதியை நடத்தியதாகக் கூறினார். தவெக தலைவர் விஜய் கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு செல்லும் போது இதுபோன்ற கூட்ட நெரிசல்களை உருவாக்கி சதி செய்ய திமுக திட்டமிட்டதாகவும், அதனால்தான் விஜய் இறுதி நாள் பிரச்சாரங்களைத் தவிர்த்தார் என்றும் அவர் விளக்கமளித்தார். தேர்தலுக்கு பயப்படாத தவெக, தேவைப்பட்டால் 234 தொகுதிகளிலும் திமுகவை டெபாசிட் இழக்கச் செய்யும் என்றும் அவர் எச்சரித்தார். 

இதையும் படிங்க: அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவப் பணியில் ஈடுபடக் கூடாது..!! அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்..!!

கரூர் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் விரைவில் வெளிவரும் என்று நம்பிக்கை தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட மக்களின் கண்ணீர் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறினார். கரூரில் 41 பேர் மரணம் அடைந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை நாட திமுக முடிவெடுத்துள்ளது. சிபிஐ விசாரணையில் இருக்கும் விவகாரத்தில் கடும் குற்றச்சாட்டை முன் வைப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழக அரசு தீவிரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share