×
 

கரூரில் பரபரப்பு... ஒன்று கூடிய மக்கள்... ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் குண்டுக்கட்டாக கைது ...!

கரூரில் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் இட பிரச்சனை - குடியிருப்பு பகுதிக்கு சீல் வைக்க சென்ற இந்து அறநிலைத்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கரூர் எம்பி ஜோதிமணி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக் கிணங்க வெண்ணமலை பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்திற்குட்பட்ட கோவில் இடங்களை சீல் வைக்கும் பணியில் இந்து அறநிலை துறை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு கிணங்க பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடைகளுக்கு சீல் வைக்கும் பணியும், காலியிடங்களுக்கு போர்டு வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கரூரில் பரபரப்பு... "தலையில் மண்ணெய் ஊற்றி"... ஸ்பாட்டுக்கு ஓடி வந்த ஜோதிமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர்...!

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஆலய வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வெண்ணமலை அருகே இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் இடம் எனக் கூறப்படும் பகுதிக்கு நடவடிக்கை மேற்கொள்ள சென்று உள்ளனர்.அப்பொழுது அங்கு இருந்த 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டு உள்ளனர். 

இந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண்கள் உட்பட மூவர் தாங்கள் வைத்திருந்த மண்ணைனையை தலையில் ஊற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் மீது தண்ணீரில் ஊற்றி பத்திரமாக மீட்டனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் எம்பி ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் "உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்கி வாருங்கள்" என தெரிவித்தனர். பதிலுக்கு நீங்கள் முதலில் மனு தாக்கல் செய்யுங்கள் என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால், கரூர் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் வரவழைக்கப்பட்டனர்.

பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: கரூரில் பரபரப்பு... "தலையில் மண்ணெய் ஊற்றி"... ஸ்பாட்டுக்கு ஓடி வந்த ஜோதிமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர்...!

நீதிமன்ற உத்தரவின் பெயரால் மக்கள் வீடுகளை பூட்டி சீல் வைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மக்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளோம். pic.twitter.com/jmbUkav7r6

— Jothimani (@jothims) November 20, 2025

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share