×
 

“தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி” - பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த கரூர் எம்.பி. ஜோதிமணி...!

மிழர்களுக்கு எதிராக தமிழ் மொழி, கலச்சாரம், பண்பாட்டை சீரழிக்க அழிந்து வரும் விளிம்பு நிலையில் உள்ள அதிமுக ஒன்றிய பாஜக அரசிற்கு ஆதரவாக துணை போவதாக கரூர் எம்பி ஜோதிமணி குற்றச்சாட்டியுள்ளார். 

SIR மூலம் தமிழ்நாட்டில் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஒன்றிய பாஜக அரசு தேர்தல் கமிஷன் மூலமாக செய்ய நினைப்பதாகவும், எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் SIR கொண்டு  வரப்பட்டுள்ளது. வரிமான வரி துறை, அமலாக்க துறை, சிபிஐ போல தேர்தல் கமிஷன் பாஜகவின் அங்கமாக திகழ்வதாகவும், தமிழர்களுக்கு எதிராக தமிழ் மொழி, கலச்சாரம், பண்பாட்டை சீரழிக்க அழிந்து வரும் விளிம்பு நிலையில் உள்ள அதிமுக ஒன்றிய பாஜக அரசிற்கு ஆதரவாக துணை போவதாக கரூர் எம்பி ஜோதிமணி குற்றச்சாட்டியுள்ளார். 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கண்காணிப்பு குழு அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கரூர் எம்பி ஜோதி மணி கலந்துகொண்டார். கூட்டம் முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தமிழ்நாட்டிற்கு பெரும் கவலை தரக்கூடிய விஷயம் என்றும் எஸ்ஐஆர் என்பது தமிழ்நாட்டில் தேர்தல் கமிஷன் சட்ட ரீதியாக ஊழல் செய்வதற்கான அணுகுமுறை தான் என்றும், பீகார் மாநிலத்தில் எஸ் ஐ ஆர் இல் சுமார் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி உள்ளனர். இதுகுறித்து தேர்தல் கமிஷன் கேட்டபோது இறந்துவிட்டவர்கள் இரட்டை வாக்குரிமை கொண்டவர்கள் என காரணம் கூறி நீக்கி உள்ளனர். நீக்கியவர்களின் பட்டியல்  குறித்து கேட்கும்போது தேர்தல் கமிஷன் உச்சநீதிமன்றத்தை நாட சொல்கின்றனர்.

6 மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி , அஸ்ஸாம் உள்ளிட்ட  மாநிலங்களில், அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் SIR அமல்படுத்தவில்லை. அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் SIR அமல்படுத்தாமல், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் மட்டும் அமல்படுத்துவதன் நோக்கம் என்ன என்று  கேள்வி  எழுப்பிய அவர்,  தேர்தல் ஆணையம் பகல் வெளிச்சத்தில் நாட்டின் தேர்தல் முறையை  சீரழிக்கும் பணியை செய்கிறார்கள் 

இதையும் படிங்க: முதல்வருக்கு மறதி நோய்... SIR விவகாரத்தில் தலையிட்ட அண்ணாமலை...!

2016ல்  பாஜக  வெற்றி பெற்றது உண்மை. ஆனால், அதன்பிறகு 2019, 2024 ஆகிய பாஜக தேர்தல் ஆணையம் உதவியோடு முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது என்பது தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  அம்பலப்படுத்தி  வருகிறார். 
    
தமிழகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தவே தேர்தல் ஆணையத்தின் மூலமாக பாஜக உள்நோக்கத்துடன் முயற்சிக்கிறது.  வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போல தேர்தல் ஆணையமும் பாஜகவின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இது துரதிஷ்டமானது. இந்திய ஜனநாயகத்தை அழிக்க கூடியது.
  
 SIR எப்போது வரும் என காத்து கிடந்ததைப் போல, அதிமுக வரவேற்கிறது.தமிழ்நாட்டின் குடியுரிமையை , மக்கள் தொகையை, கலாச்சாரத்தை எதிர்காலத்தை மாற்றக்கூடாது என்பதை கருத்தில் கொள்ளாமல்,  அழிவின் விளிம்பில் உள்ள அதிமுக பாஜக பிடியில் உள்ளது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. 

பாஜக வாக்காளர் பட்டியலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பயன்படுத்தி  ஊழல் செய்ய முயற்சிக்கிறது.எந்த கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தை அழிக்கும் விசயங்களை அதிமுக எதிர்க்க வேண்டும்.
  
மாநில அதிகாரிகள்தான் SIR பணியில் ஈடுபடுகிறார்கள் ஏன் அச்சப்படுகிறார்கள் என்பது குறித்து கேட்டபோது,  மாநில அரசு அதிகாரிகள் ஈடுபடுவது இல்லை. மொத்தமாக இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்தே பெயர்களை நீக்கிவிடுகிறார்கள். இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், ஒரு நிறுவனத்துக்கு ஒரு வாக்கை நீக்க 80 ரூபாய் கொடுத்து பெருமளவு வாக்கை நீக்கியுள்ளது. 

அந்த 80 ரூபாய் யார் கொடுத்தது. நிச்சயமாக பாஜகதான் கொடுத்திருக்கும். முதல்வர் அழைப்பு விடுத்துள்ள SIR க்கு எதிரான கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டு மக்கள் SIR க்கு எதிராக ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து நிற்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்பாற்ற முடியும்
 என எம்பி ஜோதிமணி கூறினார்.
 

இதையும் படிங்க: SIR புதுசா முதல்வரே? RK நகர் தேர்தலுக்கு CASE போட்டது யாரு... விளாசிய நயினார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share