#BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!
கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் 2025 செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பின்னணியில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு, நிதியுதவி உள்ளிட்ட உதவிகளுடன், கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க முடிவு செய்தது.
இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முக்கிய மனுதாரர்களில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் அடங்குவர். மனுக்களில், அரசு வேலை வழங்குவது அரசியல் சாசனத்தின் 14 மற்றும் 16 வது பிரிவுகளுக்கு எதிரானது என்றும், TNPSC மூலம் போட்டித் தேர்வு முறையை மீறுவது என்றும், எந்த சீரான கொள்கை அல்லது அரசாணை இல்லாமல் இத்தகைய நியமனம் செய்வது தவறு என்றும் வாதிடப்பட்டது.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இத்தகைய நடவடிக்கை விசாரணையை பாதிக்கும் என்றும் கூறப்பட்டது. TNPSC வாயிலாக வேலை தேடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உரிமைகளை பாதிக்கும் என்பதும் எதிர்ப்பின் முக்கிய காரணமாக இருந்தது. 2026 ஜூலை 10 அன்று மதுரை உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. அன்று மாலை கரூரில் முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று கூறியது. “கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு? அவர்களுக்கு பொருளாதார உதவி தேவைதானே?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: நடிக்குறாங்க... DMK ஆல்ஃபா கொரோனா... TVK பீட்டா கொரோனா..! இன்பதுரை விளாசல்..!!
எனினும், இடைக்கால உத்தரவாக, பணி நியமனங்கள் தற்காலிகமானவை மட்டுமே என்றும், நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டவை என்றும் தெரிவித்திருந்தனர். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வேலை வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு வேலை வழங்கியதை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்திற்கு அரசின் கொள்கை முடிவுப்படி அரசு பணி வழங்கியதாக விளக்கம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஏன் சுய தொழில் முனைவராக மாற்றக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி இருக்கிறது. திறன் வளர்பு பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவலாமே என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். சமீபத்தில் முதல்வர் விஜய் அரசு பணிக்கான ஆணைகளை வழங்கி இருந்த நிலையில் தற்போது அதனை நீதிமன்றம் ரத்து செய்து இருப்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எப்படியும் சாதாரண பணி அல்ல என்றும் அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் பணி தான் என்றும் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? இல்ல புரளியா? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி!