×
 

#BREAKING விஜய்க்கு திக்... திக்... கரூர் வழக்கில் தலைகீழ் திருப்பம்... தவெகவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல்...!

கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டவர்கள் தாங்கள் மனு தாக்கல் செய்யவே இல்லை என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தவெக தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துவக்கி நடத்தி வருகிறது. இதற்கிடையில் கூட்டத்தில் சிக்கி இறந்த 10 வயது சிறுவனின் தந்தை ஒருவர் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் குறித்து உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி விசாரிக்குமா? இல்லை வழக்கு விசாரணை சிபிஐ வசம் செல்லுமா? இல்லாவிட்டால் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் மேற்பார்வையிடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே,  சிறுவனின் தந்தைக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், மகனுக்கு இறுதி சடங்கு செய்யக்கூட அவர் வரவில்லை என்றும், மகனின் வயது கூட அவருக்கு தெரியாது என்றும் காசுக்கு ஆசைப்பட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக இறந்த சிறுவனின் தாயார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கோரி பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனுக்களில் குளறுபடி நடந்திருப்பதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியான நிலையில், சிபிஐ விசாரணை கோரிய மனுதாரரகளாக கூறப்பட்ட பிரபாகர், செல்வராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் தாங்கள் மனு தாக்கல் செய்யவே இல்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

அந்த மனிவில் தங்களுக்குத் தெரியாமலேயே உச்சநீதிமன்றத்தில் எங்கள் பெயர்களில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share