#BREAKING காலையிலேயே விஜய்-க்கு செம்ம ஷாக்... 15 நாட்களுக்கு பிறகு கரூர் வழக்கில் சிபிஐ-ன் அதிரடி மூவ்...!
கருரில், 41 பேர்கள் உயிரிழந்த சம்பவத்தில் நடந்தது என்ன? சார்ஜ் எடுத்துக் கொண்ட 15 நாட்களுக்கு பிறகு தனது முதல் கட்ட விசாரணையை தொடங்கியது சிபிஐ.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி யில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர், இச்சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 109, 110, 125 ,223 என 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் பிறகு இந்த வழக்கு உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் கரூர் சுற்றுலா மாளிகையில் கடந்த 17ஆம் தேதி முதல் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் குற்றவியல் கோர்ட்டில் நகர போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சிபிஐ தங்களது சார்பில் புதிய வழக்கு எண் குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: கரூர் சம்பவம்... உச்சநீதிமன்றத்தை நாடுவோம்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!
இந்த வழக்கு தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் சிபிஐ முன் ஆஜர் ஆவார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மதிவண்ணன் ஆவணங்களுடன் ஆஜராக வந்தார். அவரை சிபிஐ போலீஸ் சார்பில் அழைத்துச் சென்றனர்.
41 பேர்கள் உயிரிழ்ந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த விசாரணை அதிகாரியான கரூர் நகர ஆய்வாளர் மணிவண்ணனிடம் முதல் கட்ட விசாரணையை
சிபிஐ அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தவெக நிர்வாகிகள், சிபிஐயில் வழக்கு தொடர்ந்த பிரபாகரன் ஆகியோரிடம் என அடுத்தடுத்து பலர் விசாரணைக்கு ஆஜர் ஆவார்கள் என தெரிய வருகிறது.
இந்த நிலையில், சிபிஐ விசாரணை குழுவில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் இருந்து 6 சிபிஐ அதிகாரிகள் வந்து இணைந்துள்ளனர். இதன் காரணமாக சிபிஐ விசாரணை அதிகாரிகள் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து விசாரணை மேலும் தீவிரமாகவும் என தெரிய வருகிறது.
இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்! கரூர் சம்பவம் இனி சிபிஐ வசம்... ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைப்பு...!
 by
 by
                                    