“யார் உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது”... சி.எம். விஜயை கேள்விகளால் கிழித்தெடுத்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்...!
தமிழ்நாட்டை நீங்கள் ஏன் அம்பானி அதானிக்கு காண்டாக்ட் விட மாட்டீர்கள் என என்ன நிச்சயம் என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் கேள்வி
முதல்வர் அவர்களே சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தாரகை வார்த்துதர பிரதமருக்கு கடிதம் எழுதினீர்கள் இதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் தமிழ்நாட்டை நீங்கள் ஏன் அம்பானி அதானிக்கு காண்டாக்ட் விட மாட்டீர்கள் என என்ன நிச்சயம் என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் கேள்வி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற இடை தேர்தலில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுகந்தி வேட்பாளர் அவர்களை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பேசுகையில், நீ வெளிநாடு செல்லும் முன்பு பாரதப் பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுதி சென்று இருக்கிறாய். சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தாரைவாக்க யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது?, இதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.
சட்டமன்றத்தில் விவாதம் நடத்தினீர்களா? அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி பேசினீர்களா? இது என்ன உங்களுக்கு சொந்தமான சொத்தா? நீங்கள் உங்களுக்கு சொந்தமாக வைத்திருக்கும் சொத்தா இருந்தால் அம்பானிக்கு அதானிக்கு கொடுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். இது என்ன கொள்கை. இப்படி செய்த நீங்கள் தமிழ்நாட்டை ஏன் காண்ட்ராக்டில் விட மாட்டீர்களா? இது என்ன நிச்சயம்.
இதையும் படிங்க: தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம்.. நேற்று ஒரே நாளில் இத்தனை குழந்தைகளுக்கா..!! அடேங்கப்பா..!!
ஆளுங்கட்சி வேட்பாளருக்கு இத்தொகுதியில் எதிர்ப்பு வலுப்பது குறித்து பேசுகையில்,
மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வராமல் இருக்க இடதுசாரி கட்சியை வெற்றிபெற செய்ய வேண்டும். கட்சி மாறுவது தமிழகத்தில் இப்போது வழக்கம் ஆகிவிட்டது. தொகுதி மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தவர்கள், வாபஸ் வழங்கிவிட்டு மீண்டும் வேறு கட்சியில் இதே தொகுதியில் போட்டியிடுவதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். மறுபடியும் வேறு கட்சிக்கு போக மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம். தாவி போனவருக்கு சரியான பாடத்தை புகட்டுங்கள்.
எஸ்.ஐ.ஆர் திருத்தம் பல மாநிலத்தில் பிஜேபி கருவியாக பயன்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதாவிற்கு துணை போய் உள்ளது..உண்மையானது திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்றதற்கு இது மட்டுமல்ல வேறு பல காரணங்கள் இருக்கும் திமுக அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியா கூட இருக்கலாம் என இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு வழக்கறிஞர் ஆக லஞ்சம்... தவெக தலையில் ஓங்கிக் கொட்டிய உயர்நீதிமன்றம்... பறந்தது அதிரடி உத்தரவு...!