முடிவை மாற்றிக் கொண்டாரா கே.சி. வீரமணி..? அதிமுகவில் வெடிக்கும் பிரளயம்..!!
எடப்பாடி பழனிச்சாமி என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுவேன் என கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியலில் அதிமுகவின் உட்கட்சி மோதல்கள் புதிய திருப்பத்தை எடுத்துள்ள நிலையில், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக பிரிவில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாறியுள்ளது. 2026 மே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த பிரிவினை முழுமையாக வெளிப்பட்டது.
கே.சி. வீரமணி, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியைச் சேர்ந்தவர். 1964ஆம் ஆண்டு பிறந்த இவர், அதிமுகவின் நீண்டகால நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமாவார். ஜோலார்பேட்டை தொகுதியில் பல தேர்தல்களில் வெற்றி பெற்ற அனுபவம் கொண்டவர். அதிமுக ஆட்சியின்போது அமைச்சர் பொறுப்பு வகித்த இவர், கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பேற்றிருந்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உடைப்பில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக வேலுமணி, சண்முகம் அணி உருவானது. இந்த அணியில் வேலுமணி சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், சி.வி. சண்முகம் முக்கிய பொறுப்புடனும் செயல்பட, கே.சி. வீரமணி உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இணைந்தனர். சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வேலுமணி தரப்பில் சுமார் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் பூகம்பம்..! EPS, வேலுமணி தரப்பு போட்டா போட்டி.! சபாநாயகரை சந்திக்க திட்டம்..!
இதில் கே.சி. வீரமணியும் ஒருவராக இருந்தார். இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன் என்று கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார். எஸ்.பி வேலுமணி அணியில் உள்ள கே.சி. வீரமணி தற்போது பேசி இருப்பது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இபிஎஸ் நியமித்துள்ள புதிய மாவட்ட செயலாளருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பதித்த நிலையில் உருக்கமாக பேசி இருக்கிறார். தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் அணியில் உள்ள கே.சி. வீரமணி தற்போது பேசி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் பேசியாச்சு..! நம்ம ஆட்சிதான்..! எடப்பாடி சொன்னதை உடைத்த சி.வி. சண்முகம்..!