×
 

விசாரணை நீதிபதியை மாத்துங்க!! கெஜ்ரிவால் கோரிக்கை!! டெல்லி மதுபான கொள்கை வழக்கில் புதிய திருப்பம்!

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு விசாரணையை, வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய் அவர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது டெல்லி அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2021 நவம்பரில் ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில் (Delhi Excise Policy 2021-22) பெரும் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கொள்கைக்கு லைசென்ஸ் வழங்கியதில் லஞ்சம், ஊழல், பணம் புழக்கம் நடந்ததாக கூறப்பட்டது. 

இதையடுத்து, துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா அமலில் உள்ள பழைய கொள்கையைத் தொடர உத்தரவிட்டு, விசாரணைக்கு சி.பி.ஐ.யை அணுகினார். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை (ED) விசாரணை நடத்தியதில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: கெஜ்ரிவால் விடுதலைக்கு எதிர்ப்பு!! கட்டம் கட்டும் சிபிஐ!! மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி ஹைகோர்ட்!!

ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், நீதிபதி காவேரி பாவேஜா 2024இல் கெஜ்ரிவால் உட்பட 22 பேரையும் விடுவித்தார். “குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை” என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து சி.பி.ஐ. டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை தற்போது நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விசாரித்து வருகிறார். அவர் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், கெஜ்ரிவால் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், “நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா அமர்வு விசாரணை நடத்துவது பாரபட்சமாக இருக்கலாம். நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைக்காக வேறு நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை டில்லி உயர் நீதிமன்றத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சி இதை “நீதித்துறையில் நம்பிக்கை வைத்துள்ளோம்” என்று கூறினாலும், எதிர்க்கட்சிகள் இதை “நீதிமன்றத்தை செல்வாக்கு செலுத்த முயற்சி” என்று விமர்சித்துள்ளன. வழக்கு தொடர்பான அரசியல் பதற்றம் டில்லியில் மேலும் அதிகரித்துள்ளது. தலைமை நீதிபதி இந்த கோரிக்கை குறித்து என்ன முடிவு எடுப்பார் என்பது இப்போது எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share