×
 

காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் மோடி!! ராகுல்காந்திக்கு பெரும் சவால்!! பிரதமர் கேரள பயணத்தில் ட்விஸ்ட்!

கேரளம் மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே இருக்கிறது. மேலும் பிரசாரத்திற்கு 14 நாட்களே அவகாசம் இருக்கின்றது.

கேரளா மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 23-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 140 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் (மார்ச் 23) முடிவுக்கு வந்தது.

மொத்தம் 2,039 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் பிரதான கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் அடங்குவர். இன்று (மார்ச் 24) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

கேரளாவில் தற்போது ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆகிய மூன்று முன்னணிகளும் தீவிரமாக களத்தில் உள்ளன.

இதையும் படிங்க: எல்லாரும் என்னை திட்டணும்! அதான் அவங்க எண்ணம்!! போரை அரசியலாக்கும் காங்கிரஸ்! மோடி விளாசல்!

மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் உள்ள சிபிஐ(எம்) தலைமையிலான இடது அணி, காங்கிரஸ் மற்றும் பாஜகவும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், பிரசாரத்துக்கு 14 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் ஏற்கனவே தீவிர பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.

இந்த சூழலில், பிரதான கட்சி தலைவர்களின் பிரசார பயணம் தொடங்க உள்ளது. பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி நாளை (மார்ச் 25) கேரளா வருகிறார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களும் அடுத்தடுத்து வர உள்ளனர்.

பாஜக தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 29-ம் தேதி கேரளா வருகிறார். அவர் திருச்சூர் நகரில் ரோடு ஷோ மற்றும் பாலக்காட்டில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். பிரதமர் மோடியின் வருகை பாஜக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரைத் தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்காரி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கேரளாவுக்கு வர உள்ளதாக மாநில பாஜக பொதுச் செயலாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கேரளா தேர்தல் இந்த முறை மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று முன்னணிகளும் தீவிரமாக போட்டியிடும் நிலையில், கடைசி 15 நாட்களில் தலைவர்களின் பிரசாரம் தேர்தல் களத்தை இன்னும் சூடுபிடிக்கச் செய்யும். 

இதையும் படிங்க: மக்களுக்கு நமஸ்காரம்!! கொச்சியில் ஸ்கோர் செய்த மோடி!! கேரளம் என பெயர் மாற்றிய தருணம்?! பிரதமர் நெகிழ்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share