×
 

பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டு!! எங்க கூட்டணி வாய்ப்பை தடுக்குறாங்க! பினராயி விஜயன் புலம்பல்!!

''கேரளாவில் உள்ளா ட்சி தேர்தலில் இடது ஜனநாயக முன்னணிக்கான வாய்ப்புகளை, பா.ஜ.,வுடன் கைகோர்த்து காங்கிரஸ் தடுக்கிறது'' என, அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார் .

திருச்சூர்: கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சூர் மாவட்டம் மட்டத்தூர் பஞ்சாயத்தில் ஏற்பட்ட அரசியல் திருப்பம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 23 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டிய இச்சம்பவத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவுடன் கைகோர்த்ததே காரணம் என்று முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மட்டத்தூர் பஞ்சாயத்தில் மொத்தம் 24 இடங்கள் உள்ளன. இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) 10 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 8 இடங்களையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 4 இடங்களையும் கைப்பற்றின. மீதமுள்ள 2 இடங்களை சுயேச்சைகள் வென்றனர்.

இதில் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு யுடிஎஃப் ஆதரவு அளிக்க முடிவு செய்திருந்தது. ஆனால் அவர் எல்டிஎஃப்புடன் கூட்டு சேர்ந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேரும் கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுடன் இணைந்து மற்றொரு சுயேச்சை வேட்பாளரை ஆதரித்தனர். இதையடுத்து டெய்சி ஜோசப் பஞ்சாயத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: சாதி, மதம் பள்ளிகளில் கூடாது! பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை!! விஜயன் அதிரடி உத்தரவு!

இச்சம்பவத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். “மட்டத்தூர் பஞ்சாயத்தில் நடந்தது தீய போக்கு. அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவுடன் இணைந்துள்ளனர். காங்கிரஸில் இருப்பவர்கள் ஒரே இரவில் பாஜகவுக்கு மாறத் தயங்க மாட்டார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. 

கை சின்னத்தை தாமரையாக மாற்றுவதில் காங்கிரஸ் தலைவர்கள் எந்தத் தார்மீக மோதலையும் உணரவில்லை. இது கேரளாவில் ஒருபோதும் நடந்ததில்லை. அருணாச்சல், கோவா, புதுச்சேரியில் நடந்தது போல கேரளாவிலும் நடந்துள்ளது வேதனையளிக்கிறது. காங்கிரஸ் தலைமை இதற்குத் தெளிவாகப் பதிலளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், “எல்டிஎஃப் ஒரு சுயேச்சையை ஆதரித்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றொரு சுயேச்சையை ஆதரித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. வேறு பிரச்சினை இல்லாததால் ஆளுங்கட்சி இதைப் பெரிதுபடுத்துகிறது” என்றார்.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் எல்டிஎஃப் பின்னடைவைச் சந்தித்த நிலையில் மட்டத்தூர் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் அட்மிட்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share